சன் tv ,விஜய் tv , ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டும் தான் இப்போது மக்களிடம் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொலைக்காட்சி சீரியல்களுக்கு இடையேதான் எப்போதும் TRP யில் போட்டி நடந்து கொண்டிருக்கும். ஆனால் தற்போது விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களின் நேரத்தில் மாற்றம் நடந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று சீரியல் ரசிகர்கள் பலரும் குழம்பி கொண்டு இருக்கின்றனர்.ஆனால் சிலர் அதற்கான காரணம் இதுதான் என தங்களுக்கு தெரிந்த விஷயங்களை வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் வரும் அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களின் நேரத்தை விஜய் டிவி மாற்றம் செய்துள்ளது .
10 மணிக்கு ஒளிபரப்பான மௌனராகம் சீரியல் மாலை 7 மணிக்கும், 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் செந்தூரப்பூவே சீரியல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை மூன்று மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் சீரியல் இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. வாரநாட்களில் தினமும் இரவு 10 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டபோதால் ஷூட்டிங் நடத்த முடியாமல் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன. அதில் மௌனராகம் சீரியலும் ஒன்று.
செம்பருத்தி சீரியலில் திமிர்பிடித்த அகிலாண்டேஸ்வரி என்ற பெண்ணாக நடித்து வரும் பிரியா ராமன் தற்போதுவிஜய் டிவி செந்தூரப்பூவே சீரியலில் ரொமான்டிக் நடிகையாக நடித்து வருகிறார். விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் ஹீரோவாக ரஞ்சித் நடித்து வருகிறார். பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் மிகவும் சுவாரசியமானவையாக இருக்கிறது.
ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டவர்கள். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். ஆனால் அவர்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்து ஜோடியாக சீரியல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தனர். அதனால் அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்கிற தகவல் வைரலாக பரவியது. ஆனால் அவர்கள் இன்று வரைக்கும் ஒன்று சேரவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.இதன் காரணமாகவே செந்தூரப்பூவே சீரியல் ஒளிபரப்பு செய்வதற்கு சரியான நேரம் கிடைக்காததால் நிறுத்தி வைப்பதாக விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…