Categories: டிவி

பாக்கிய லட்சுமி சீரியலில் வரும் இவர் இந்த புகழ்வாய்ந்த நடிகரின் மகனா!. இது தெரியாம போச்சே.

ஒரு குடும்ப ஆட்களை மட்டுமே கொண்டு, பெரிதாக எந்த ஒரு வில்லத்தனமும் இல்லாமல் ஒரு சீரியலை இந்த காலத்தில் எடுக்கமுடியுமா என்ற கேள்வி பலருக்கும் ஏற்படும். ஆனால் அதற்க்கு விடையாக தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கிய லட்சுமி சீரியல் இருக்கிறது. மிக குறைந்த நடிகர்களை கொண்டு சிறப்பாக இந்த சீரியல் சென்றுகொண்டு இருக்கிறது.

Bhagyalakshmi serial

இந்த சீரியலை பொறுத்தவரை பாக்கிய லட்சுமி தான் நாயகி என்றாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவம் இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களும் மனிதில் பதியும் படி எடுக்கப்பட்டது வருகிறது இந்த சீரியல். ஒருவரை நீக்கினால் கூட சீரியலின் தன்மை மாறும் என்றும் கூறும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாக்கியா கேட்டரிங் ஆரமித்து, வீடுகளுக்கு சாப்பாடு கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு பணக்கார வீட்டை சேர்ந்தவர் பாக்கியாவின் சமையலை பார்த்து, தன் அம்மாவின் கைப்பக்குவம் இந்த சமையலில் தான் இருக்கிறது என்று கூறி பாக்கியலட்சுமியிடம், தன் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் ஒரு விழாவிற்கு 1000 பேருக்கு சமைக்க வேண்டும். அதை நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இதையும் படிக்கலாமே:
மனோரமாவின் கணவன் மற்றும் மகனை பற்றி கேள்விப்பட்டதுண்டா? மனோரமாவின் வாழ்வில் நடந்தது என்ன?

அவர் அப்படி கூறுவதற்கு காரணம், பாக்கியாவோடு அந்த வீட்டிற்கு செல்லும் செல்வி தான். எங்கள் கேட்டரிங்கில் 25 பேர் வேலை செய்கிறார்கள், 5000 பேருக்கு நாங்கள் சமைத்திருக்கிறோம் என்று செல்வி அடுக்கடுக்காக கூறிய பொய்யால் தான் அந்த பணக்காரர் பாக்கியாவிடம் அந்த ஆடரை கொடுக்கிறார்.

Sanjay Shankar in serial

அந்த பணக்காரரின் பெயர் ராஜசேகர். உண்மையில் ராஜசேகர் கதாபாத்திரத்தில் நடிப்பவர், பழம்பெரும் நடிகரான ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர் தான். அப்பாவை போல முக ஜாடை கொண்ட இவர் இதுவரை சில நிமிடங்கள் மட்டுமே அந்த சீரியலில் தோன்றி இருந்தாலும் இவரின் நடிப்பு மனதில் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago