மனோரமாவின் கணவன் மற்றும் மகனை பற்றி கேள்விப்பட்டதுண்டா? மனோரமாவின் வாழ்வில் நடந்தது என்ன?

ஆச்சி மனோரமா என்றால் அனைவருக்கும் தெரியும். கிட்ட தட்ட 1500 படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகை இவர் தான். அதுமட்டும் இல்லாமல் 5000 நாடகங்களில் நடித்த பெருமையும் இவரை சாரும். நடிப்பில் நவரசங்களையும் வெளிப்படுத்தும் திறமை கொண்ட ஆச்சி மனோரமா வாங்காத விருதுகள் இல்லை என்று கூறும் அளவிற்கு தேசிய விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

இவர் மிகப்பெரிய நடிகையாக இருந்திருந்தாலும் இவருடைய ஆரம்பகால வாழ்க்கை என்பது மிக மிக கடினமான ஒன்றாக தான் இருந்துள்ளது. மனோரமா தன் தாயின் கருவறையில் இருந்து இந்த உலகத்தை கண்ட அடுத்த நொடியில் இருந்தே அவருக்கான சவால்கள் காத்திருக்க துவங்கின. ஆம், அவர் பிறந்த உடனே, பிறந்தது பெண் குழந்தை என்பதை அறிந்த அவருடைய தந்தை, தாயையும் சேயையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டார்.

கை குழந்தையோடு தனியாக வந்த மனோரமாவின் தாயார், அவரை மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்க துவங்கினார். ஒரு கட்டத்தில் தன் தாயின் உடல் நிலை மோசமாக உள்ளது என்பதை அறிந்த மனோரமா, தன் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு சென்றுள்ளார். மனோரமா நன்றாக பாடுவார் என்பது அந்த ஊரில் வசிக்கும் பலருக்கும் தெரிந்திருந்தது.

இந்த நிலையில் அந்த ஊரில் ஒருமுறை நாடகம் நடந்த போது அந்த நாடகத்தில் நடித்த நாயகிக்கும் வசனமோ, பாட்டா வரவில்லை. இதனால் அந்த நாடகத்தில் வேறு யாரையாவது நடிக்க வியக்கலாம் என்று அந்த நாடகக்குழு அந்த ஊரில் உள்ளவர்களை விசாரிக்கையில், மனோரமாவை அனைவரும் கை காட்ட, மனோரமா அந்த நாடகத்தில் நடித்தார். அந்த நாடகத்தில் அவர் நடிப்பை கண்டு பலரும் பாராட்டினர்.

அந்த நாடகத்தின் ஒரு அங்கமாக இருந்த பால் ராஜ் என்பவர் மனோரமாவின் நடிப்பை பார்த்து, அவருக்கு அடுத்தடுத்து பல நாடகங்களில் வாய்ப்புகளை பெற்று தந்தார். மனோரமாவும் தன் நடிப்பு திறமையால் வேகமாக அடுத்த நிலைக்கு வளர்ந்து வந்தார். இந்த நிலையில் நாடக சபாவின் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ்.எம் ராமநாதன் என்பவர் மனோரமாவை காதலிக்க துவங்கினார். மனோரமாவும் ஒரு கட்டத்தில் அவரை காதலித்தார்.

மனோரமாவின் தாய்க்கு கூட தெரியாமல் அவர் எஸ்.எம் ராமநாதனை திருமணம் செய்துகொண்டார். இதனால் மனோரமாவின் தாயார் பெரிதும் வேதனை அடைந்தார். மனோரமாணவின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக தான் சென்றது. மனோரமா கற்பனமானதும், பிரசவத்திற்காக தன் தாய் வீட்டிற்கு வந்தார். அவர் அங்கு சென்ற பிறகு எஸ்.எம் ராமநாதன் அவரை போய் பார்க்கவே இல்லை.

குழந்தை பிறந்து 15 நாட்கள் கழித்து தான் எஸ்.எம் ராமநாதன் மனோரமாவை சென்று பார்த்தார். அப்போதும் அவர் குழந்தையாய் பார்க்க செல்லவில்லை, மாறாக மனோரமாவை நாடகத்தில் நடிப்பதற்காக அழைத்துச்செல்ல தான் வந்திருந்தார். குழந்தை பிறந்து 15 நாட்கள் தான் ஆகிறது அதற்குள் எப்படி நடிக்க வருவது என்று மனோரமா கூற, இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.எம் ராமநாதன், இனி உன்னை நான் சந்திக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

தன் கணவன் ஏதோ கோபத்தில் கூறிவிட்டார், கண்டிப்பாக தன்னை அவர் சந்திக்க வருவார் என்று எண்ணினார் மனோரமா. ஆனால் 1 வருடம் கழித்து அவரிடம் இருந்து விவாகரத்து பத்திரம் தான் வந்தது. இதனால் மனோரமா மனம் உடைந்து போனார். அது மட்டும் அல்லாமல், தன்னை அவருடைய நாடக குழுவில் தக்கவைத்துக்கொள்ள தான் காதலிப்பது போல நடித்து தன்னை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்ற உண்மையை அறிந்த போது மனோரமா உடைந்து போய்விட்டார். அதன் பிறகு எஸ்.எம் ராமநாதன் இறக்கும் வரை அவர் மனோரமானவை சந்திக்கவே இல்லை.

Boobathi

மனோரமா தன்னுடைய மகனுக்காகவே தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணிக்க துவங்கினார். அவருடைய மகன் பெயர் பூபதி. மனோரமா கடந்த 2015 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். பூபதி குறித்து பெரிதாக செய்திகள் எதுவும் இல்லை என்றாலும் கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் அதிக அளவில் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டதால் மருத்துவ மனையில் சில நாள் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago