பொழுதுபோக்கு

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இந்த படத்தில் கூடுதலாக ஒரு பொறுப்பையும் ஏற்றுள்ளார் விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மையோடு தற்போது தமிழ் சினிமாவில் வளம் வந்துகொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இவரது இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளிவந்திருந்தாலும், நாக்கு மூக்க பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது குறிப்பிடத்தக்கது.

சலீம், அண்ணாதுரை, இந்தியா பாகிஸ்தான், எமன் இப்படி பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் “பிச்சைக்காரன்” படம் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிட தக்கது.

இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பிச்சைக்காரன் படம் சிறப்பாக ஓடியதை தொடர்ந்து அந்த படம் வேறு சில மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அம்மா சென்டிமென்டை மையமாக கொண்ட இந்த படத்தில் “நூறு சாமிகள் இருந்தாலும்” என்ற பாடல் இன்றும் பிரபலம்.

தற்போது விஜய் ஆண்டனி நடித்து வெளிவர இருக்கும் படம் கோடியில் ஒருவன் படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் படம் “பிச்சைக்காரன் 2”. இது குறித்த அதிகாரப்பூரவ தகவல் வெளிவந்துள்ளது.

பிச்சைக்காரன் முதல் பாகம் போல் அல்லாமல் இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு இதை இயக்கவும் இருக்கிறார். அதே போல பாத்திமா விஜய் ஆண்டனி இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago