Namitha marimuthu
விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி படு சூப்பராக சென்றுகொண்டு இருக்கிறது. இதில் முதல் நாளே 18 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அதில் நமீதா மாரிமுத்துவும் ஒருவர். நேற்றைய தினம் வெளியான ப்ரோமோக்களில் நமீதா மாரிமுத்து இடம் பெற வில்லை. இதனால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றுவிட்டார் என்ற செய்தார் பரவியது. அதை உண்மையாகும் வகையில் பிக் பாஸே அதிகார பூர்வாமாக அதை நேற்றைய நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தி விட்டார்.
திருநங்கையான நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த பாதை குறித்து நெகிழ்ச்சியாக பல தகவல்களை கூறினார். இதனால் பலரும் அவரை பாராட்டினார். திருநங்கைகளுடைய கஷ்டங்களை கேட்டு பலரும் கண்கலங்கினார். போட்டியாளர்கள் பலரும் அவருக்கு ஹார்ட் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து அவருக்கும் தாமரை செல்விக்கும் இடையே சில வாகு வாதங்கள் ஏற்பட்டது. அந்த சமயத்தில், வயது வித்யாசம் பார்க்காமல் நான் நன்றாக கேட்டு விடுவேன் என்று நமீதா கூறியது பலரையும் முகம் சுழிக்க செய்தது. அதே வேலையில் தாமரை நமீதாவிடம் மன்னிப்பு கேட்டும் அவர் தாமரையை மன்னிக்க தயாராக இல்லாமல் இருந்தார்.
இதையும் படிக்கலாம்: பெசன்ட் நகர் ரவியின் அழகான மகளை பார்த்துள்ளீர்களா? அப்பா கருப்பு என்றாலும் பொண்ணு தகதகவென மின்னும் தங்கம்.
இந்த சூழலில், தாமரை தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் நமீதா அவரை எழுப்பி, நான் உங்களை மன்னித்துவிட்டேன் என்று கூறியதை நாம் பார்த்தோம். அதே போல, பாசமாக இருந்தாலும் கோபமாக இருந்தாலும் என்னிடம் இருந்து அதிகமாக கிடைக்கும் என்றும் நமீதா தாமரையிடம் கூறினார்.
இப்படி இருக்கையில், திடீரனென்று நமீதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் என்ற தகவல் வெளிவந்தது. இது குறித்து கசிந்த தகவலில், நமீதா, பிக் பாஸ் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், அதோடு அவர் அதிகப்படியாக உணர்ச்சிவசப்பட்டதால் அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து நமீதா ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டாராம். ஆனால் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை. நமீதா இரவு 3 மணிக்கு மேல் வரை விழித்திருந்து உலாவி வந்ததை நாமே பிக் பாஸ் வீட்டில் பார்த்தோம். இரவெல்லாம் தூங்காமல் இருந்தால் இப்படி நடக்க சாத்தியம் உண்டு என்றே கூறலாம்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…