தமிழ் தொலைக்காட்சி உலகில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் உண்மை நிலை நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த 5 சீசன்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நட்சத்திர நடிகர் உலக நாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது கமலஹாசன் தன் சினிமா படப்பிடிப்புகளிலும், அரசியலிலும் பிசியாக உள்ளதால் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க மாட்டர் என்பது போன்ற செய்திகள் சமூக வலைதள பக்கங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமான செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் எனவும் அதிகாரப்பூர்வ செய்து வெளியாகி உள்ளது.
இதற்கு முந்தைய சீசன்கள் போல அல்லாமல் இந்த சீசனில் திரை பிரபலங்கள் மற்றும் சாமானிய மக்களும் பிக்பாஸ் வீட்டில் தங்குவார்கள் என கூறப்பட்டு வருகின்றது. ஆனால் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளூம் போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் நடிகைகள் தர்ஷா குப்தா, தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், இசையமைப்பாளர் டி இமானின் முன்னால் மனைவி மோனிகா ரிச்சர்ட், பாடகி ராஜலக்ஷ்மி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்ற செய்தியும் சமூக வலைதள பக்கங்களில் உலாவி வருகின்றன.
இந்த நிலையில் இந்த சீசனை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசனின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளதாம். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான “விக்ரம்” படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது தானாம். பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கு 55 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு 20 கோடி அதிகமாக, அதாவது 75 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…