periya
- நேற்றைய பிக் பாஸ் வீட்டில் அனைவரும் பாட்டு, காமெடி என்று மிகவும் சந்தோஷமாக பொழுதை கழித்தனர். ஆனால் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது தான் ரிலீஸானது அந்த ப்ரோமோ வில் நாம் எல்லோரும் ஆர்வமாக எதிர் பார்க்கும் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடக்கப்போகிறது. இன்று அனைத்து போட்டியாளர்களும் தங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் உருக்கமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்பொழுது அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ராஜு மட்டும் துடுக்கு தனமாக நாம் எல்லோரும் கலைஞர்கள் நாம் மக்களிடத்தில் எப்பொழுதும் நமது சந்தோஷமான முகத்தை காட்ட வேண்டும் துயரமாக இருக்கும் முகத்தை காட்ட கூடாது என்று கூறுகிறார்.
மேலும் அவர் பிக்பாஸ் போட்டியாளரான பாடகி சின்ன பொண்ணுவை சீண்டும் விதமாக சின்ன பொண்ணு விடம் நீங்கள் பாடும் பொழுது எனக்கு கிடைக்கும் அந்த பீல் நீங்கள் இப்ப சொன்ன கதையில் எனக்கு கிடைக்கவில்லை. என்று பளீரென்று முகத்திற்கு நேராக சொல்லிவிடுகிறார்.
மேலும் அவர் பிறர் நம்மளை கைதட்டி சூப்பர் என்று சொன்னால் மட்டும் நாம் முன்னேறிவிட முடியாது. நாம் நடந்து போகும் போது நமக்கு எதிரே இருக்கும் சுவர் போன்ற பிரச்சினையை அடித்து நொறுக்க வேண்டும். இந்த பிக் பாஸ் வீட்டில் நான் உங்களுக்கு அந்த சுவர் போல தான் என்று வெளிப்படையாக சின்னப்பொண்ணுவிடம் ராஜு கூறுகிறார். சின்ன பொண்ணும் திடீரென்று ராஜு இப்படி சொல்வதை கேட்டு என்ன சொல்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்.
ராஜுவின் இந்தப் பேச்சை கேட்டு அதிர்ந்து போன மற்ற போட்டியாளர்கள் சின்ன பொண்ணுவிடம் கோச்சிக்கிட்டிஙகளா என்றும் கேட்கின்றனர். ஆனால் சின்ன போண்ணோ இல்லை இல்லை என்று சமாளித்தாலும், அவரது முகத்தில் அந்த வருத்தம் தெரியத்தான் செய்கிறது.இவ்வாறாக இந்த ப்ரோமோ என்று முடிகிறது. எப்படி இருந்தாலும் இந்த வாரம் மிக சென்டிமென்ட் ஆகவே நகரும் என்று தெரிகிறது. ஆனால் இதைப்போல் அடுத்தவாரம் இருக்காது என்றும் இதற்கு தலைகீழாக மாறிவிடும் என்றும் நாம் அறிந்ததே.
மேலும் ராஜுவின் இந்த வெளிப்படையான பேச்சு பல ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. சிலர் அவரை திட்டவும் செய்கின்றனர். எப்படி இருந்தாலும் ராஜுவிற்கென்று சில பெண் ரசிகைகளும் இருக்க தான் செய்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்ததன் மூலம் ஓரளவிற்கு உச்சத்தை அடைந்து வரும் ராஜு அவர்கள் இப்போட்டியில் வெல்ல வேண்டுமென்று இப்போதிருந்தே அவரது பெண் ரசிகர்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…