Categories: மூவிகள்

பல வருடங்களுக்கு பிறகு திரையில் நடிக்க தயாராகும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையின் அத்தை

பெங்காளியை பூர்விகமாகக் கொண்ட பிரபல முன்னணி நடிகை மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்ற தயாராகி வருகிறார். 1980களில் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் ஆகிய பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் பிரபல நடிகரின் மனைவி திருமதி அமலா அவர்கள். தனது குருகுரு பார்வையாலும், துருதுரு நடிப்பாலும் சட்டென்று அனைவரையும் தன்வசப் படுத்திக்கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக எண்பதுகளில் திகழ்ந்தவர் தான் அமலா அவர்கள்.

amala

இயக்குனர் திரு டி ராஜேந்தரின் இயக்கத்தில் மைதிலி என்னை காதலி என்ற படத்தில்தான் முதன்முதலில் தனது திரைப் பயணத்தை தொடங்கினார் அமலா. இவரின் முதல் திரைப்படமே வெற்றித் திரைப்படமாக அமைய அமலா அவர்கள் பல்வேறு மொழிகளிலும் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார்.

இவர் நடித்த படங்களில் நடிகர் மோகனுடன் நடித்த மெல்ல திறந்தது கதவு, ரஜினியுடன் நடித்த வேலைகாரன், போன்ற திரைப்படங்கள் மிகவும் குறிப்பிடத் தக்கவையாகும். மெல்ல திறந்தது கதவு திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் தான். அமலா அவர்களும் தனது நடிப்பு திறமையை முழுமையாக இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். நூர்ஜஹான் என்ற இஸ்லாமிய பெண் கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் இன்றளவும் அனைத்து ரசிகர்களாலும் மறக்க முடியாத வெற்றித் திரைப்படமாக இருக்கிறது.

amala

புகழின் உச்சியில் இருந்த பொழுதே அமலா அவர்கள் தெலுங்கில் பிரபல நாயகனாக இருந்த நாகார்ஜுனா அவர்களை காதலித்து மணம் மணமுடித்தார். அதன் பிறகு தனது திரைப் பயணத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொண்டார்.. இருவருமே சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் அமலா மற்றும் நாகார்ஜுன் தம்பதிக்கு அக்கினி அகில் மற்றும் நாகசைதன்யா என்ற இரு மகன்கள் உள்ளனர்.. இவர்கள் இருவருமே திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர். நாக சைதன்யா தமிழ் திரைப்படத்தின் முன்னணி நாயகியாகியான சமந்தாவின் காதல் கணவர் ஆவார்.

அமலா அவர்கள் தனது திரைப் பயணத்தின் கடைசி படமாக இயக்குனர் பாசில் இயக்கிய கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவே இவரின் திரை பயணத்தின் இறுதியான படமாக இருந்தது. அதன் பிறகு நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அமலா தோன்றியிருந்தாலும் அவைகள் பெரிய அளவிற்கு பேசும் பொருட்டு இல்லை..

இந்நிலையில்தான் அமலா அக்கினி மீண்டும் திரை படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகியுள்ளார். எண்பதுகளில் அதை எப்படி இருந்தாரோ அதே அழகு தான் இன்று வரையிலும் இருக்கிறார் மீண்டும் தான் நடிக்க வரும் அச்செய்தியைஅவரே அதிகாரப் பூர்வமாகவும் வெளியிட்டுள்ளார். இது அமலாவின் ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இப்படம் தமிழில் வெற்றி பெறும் என்றும் அவர் தனது உரையில் கூறியுள்ளார்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago