இவர் இப்படிப்பட்ட நடிகரா என ஆனந்தராஜ் பற்றிய உண்மையை போட்டுடைத்த பயில்வான்

80 மற்றும் 90களில் சினிமா வட்டாரத்தை கலக்கிய வில்லன் நடிகர் ஆனந்தராஜ் அவர்கள். வில்லனுக்கே ஏற்ற உரிய பாவனையில் தனது உடல் மொழியால் அனைவரையும் பயமுறுத்தி தனது கதாபாத்திரத்தை செம்மையாக நடித்தவர். மேலும் இவரது படங்கள் அனைத்திலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் மட்டுமே இவர் நடித்து வந்தார். சமீபகாலமாக வந்த சில படங்களில் தான் இவரை வில்லனாகவே இருந்து வந்த இவருக்குள் ஒளிந்திருக்கும் இன்னொரு முகத்தையும் நம்மால் காண முடிகிறது.

வில்லனாக அனைவரையும் பயமுறுத்தி வந்த ஆனந்தராஜ் தற்போது காமெடியனாக அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைத்து வருகிறார். மேலும் இவர் சிரிப்பு வில்லனாக இருப்பதால் குழந்தை முதல் பெரியவர் வரை அனைவராலும் மிக சுலபமாக ஈர்க்கப்பட்டு வருகிறார். சமீபகாலமாக இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாகி உள்ளது.

ஜாக்பாட், நானும் ரவுடி தான், மரகத நாணயம் போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரங்கள் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. 80ஸ் படங்களில் எவ்வாறு அனைத்து கதாநாயகர்களுக்கும் ஏற்ற வில்லனாக இருந்தாரோ, அதே போல இப்போது வரும் படங்களில் நடிக்கும் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஏற்ற வகையில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் ஆனந்த்ராஜ். மேலும் அக்காலம் முதல் இக்காலம் வரை அனைத்து ரசிகர்களுக்கு ஏற்றபடி தனது உடல் மொழியையும் நடிப்புத் திறனையும் மிகவும் அழகாக மெருகேற்றி வருகிறார் திரு ஆனந்தராஜ் அவர்கள்.

தற்போது இவரை பற்றிய சில உண்மை இரகசியங்களை போட்டுடைத்தார் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான். அவர் கூறுகையில் நான் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்கள், துணை நடிகர்கள் மற்றும் வில்லன்களுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் ஆனந்தராஜ் அவர்கள் மட்டும்தான் எந்த நடிகைகள் உடனும் கிசுகிசுக்க படாத நடிகர் என்றும், எந்த நடிகையின் வலையிலிலும் சிக்காத ஒரே நடிகர் ஆனந்தராஜ் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனக்கென்று ஒரு வரையறை வைத்து அதற்கேற்றார் போல் தனது சினிமா பயணத்தை நகர்த்தி வருகிறார். இதுவே அவரது வெற்றிக்கான மிக முக்கிய காரணமாகவும் இருக்கிறது.

நடிகர் ஆனந்தராஜ் அவர்கள் படங்களில் எந்த அளவிற்கு வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறாரோ நிஜத்தில் அந்த அளவிற்கு மிகவும் சிறந்த மென்மையான நல்ல மனிதர் ஆவார். மேலும் பலர் முன்னணி கதாநாயகர்களாகவும் மற்றும் முன்னணி வில்லன்களாகவும் இருந்தாலும் தற்போது இருந்த இடம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால் இவர் தனது நன் நடத்தையால் இன்றளவும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

இன்றும் ரசிகர்கள் பழைய வில்லன் ஆனந்தராஜை ஒரு முறையாவது திரையில் காண வேண்டும் என்று ஆர்வமாகவும் ஆசையாகவும் உள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து இதே மாதிரியான காமெடி வில்லனாக நடித்தாலும் கூட மக்கள் அவரை மேன்மேலும் வாழ்த்தி மனமார ஏற்றுக் கொள்வார்கள்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago