புகைப்பட செய்தி

அட லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணமா? கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் பரபரப்பு செய்தி

தனது முதல் படத்திலேயே பிலிம்ஃபேர் அவார்ட், தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் வாங்கியவர் நடிகை லட்சுமி மேனன். முதல் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிப்பிலும், படிப்பிலும் என இரண்டிலும் கவனத்தைச் செலுத்தி வந்தார் இவர். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவரைத் தானாக தேடி வந்தன. அடுத்தடுத்து வந்த பல படங்களும் இவருக்கு வெற்றிப் படங்களாகவே அமைந்தது

lakshmimenan

தனது பதினைந்தாம் வயதில் சசிகுமாரரின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கேரள நடிகை லட்சுமி மேனன். இவரது இந்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகி என பலராலும் போற்றப்பட்ட அதற்கான அவார்டுகளையும் பெற்றார். தற்போது கதாநாயகிகளுக்கிடடையேயான போட்டியில் தனது உடல் அளவை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார்.

ஆனால் தற்போது இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. எனவே திருமண வயதை எட்டிய லட்சுமி மேனனுக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்யப்போவதாக பல வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவருக்கு லட்சுமிமேனனின் பெற்றோர்கள் டாக்டர் மாப்பிள்ளை பார்த்து வைத்துள்ளதாகவும், விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

lakshmimenan

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் லட்சுமிமேனன் ரசிகர் கேட்ட நீங்கள் சிங்கிளா என்று கேட்ட கேள்விக்கு அழகாக பதில் அளித்துள்ளார். அதில் வெட்கப்படும் ஒரு பெண்ணின் எமோஜி படத்தை அனுப்பி வைத்து இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.

இவ்வாறு நடிகை லட்சுமி மேனன் கூறிய பதிலிலிருந்து அவர் யாரோ ஒருவரை காதலித்து வருகிறார் என்பது தெரிய வருகிறது. ஆனால் அவர் யார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவரின் திருமணப் பேச்சு பரவி கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் லட்சுமி மேனன் அளித்துள்ள இந்த பதிவவு இவரது திருமணத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற ஆவலை பலரிடமும் உருவாக்கியுள்ளது.

lakshmumenan

இவர் நடித்த பல படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் இதுவரையில் நடித்திருந்தார். எனவே தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை தனக்கென பிடித்து வைத்துள்ளார் என்று சொல்லலாம். எனவே படங்களில் நடிப்பது குறைந்து விட்டாலும் தனது ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எப்பொழுதும் சோஷியல் மீடியாவில் தனது புகைப்படங்களை தவறாமல் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் லட்சுமி மேனன்.

lakshmimenan

தற்போது தோலின் நிறத்தில் உள்ள ஆடை ஒன்றை அணிந்து கொண்டு பலவிதமான போஸ்களை கொடுத்து அதனை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் லட்சுமி மேனன். கொஞ்சம் காலமாக உடல் எடையைக் குறைத்து பார்ப்பதற்கு முகம் சுழிப்பது போல் இருந்த லட்சுமேனன் தற்போது உடல் எடையை கூட்டி கட்டுக் கோப்பான உடலமைப்புடன் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலர் வாயை பிளந்து கொண்டு இவரை பார்த்து உருகி வருகிறார்கள்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago