புகைப்பட செய்தி

கையில் குழந்தையுடன் ஜோடியாக நயன்தாரா வெளியிட்ட புகைப்படம். குழம்பிக் கொண்டிருக்கும் ரசிகர்கள்

தென்னிந்திய நடிகையான நயன்தாரா முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். அதிலும் தமிழ் மக்களால் லேடி சூப்பர்ஸ்டார் எனவும் பெயர் பெற்றிருக்கிறார். சிங்கிள் கதாநாயகியாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் நயன்தாரா. நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில காலங்களாக பேட்டிங் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகின்றனவே தவிர, இவர்கள் இருவரும் இதைப் பற்றி எந்தவித தகவல்களையும் வெளிப்படையாக கூறவில்லை.

nayanthara

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து பணிபுரிந்த நேரத்தில் தான் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இவர்கள் நெருக்கமாக இருப்பதை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்லும் இடங்களில் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தங்களின் இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இவர்களின் சமூக ஊடகப் பதிவுகள் இவர்கள் காதலித்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இவர்கள் இருவரும் சேர்ந்து குடும்ப வாழ்க்கையை தொடர போவது என்பதை குறிப்பிடும் வகையில் உள்ளது.

nayanthara

அவ்வாறு நயன்தாரா அவர்கள் பல தொலைக்காட்சி பேட்டிகளில் விக்னேஷ் சிவன் பற்றி கூறும் போது அவருடன் இருப்பது மிகவும் கன்ஃபட்டபுளாக இருப்பதாகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும் நயன்தாரா கூறுகிறார். தனக்கு மிகவும் பிடித்த நபர் விக்னேஷ் சிவன் என்றும் குறிப்பிடுகிறார்.

நானும் ரவுடிதான் படத்தின் மூலம் மூன்றாவதாக காதல் மலர்ந்தது நயன்தாராவிற்கு. கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடிகள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

vigneshsivan

இந்த சூழ்நிலையில் அன்னையர் தினம் அன்று விக்னேஷ் சிவன் தனது தாயின் புகைப்படத்தை வெளியிட்டதோடு நயன்தாராவின் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டிருந்தார். விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்களுடன் நயன்தாராவும் சென்று வருகிறார். இதிலிருந்து இவர்கள் இருவரின் குடும்பமும் இவர்களை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

nayanthara

இப்படி திருமணம் எப்போது என்று கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களின் மத்தியில் தற்போது வெளியான இவர்களின் புகைப்படும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடனும் இவருடன் விக்னேஷ் சிவன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தான் அது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தக் குழந்தை யாருடையது என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago