பிக் பாஸ் சீசன் 5 விரைவில், என்ற ப்ரோமோ வெளியானதில் இருந்து இந்த சீசனில் யாரெல்லாம் பங்குபெற போகிறார்கள் என்று பல மீடியாக்களும் பலவடிதமான் லிஸ்ட்களை பகிர்ந்து வருகின்றனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 5 ஆம் சீசனில் 15கும் மேற்பட்ட பிரபலங்கள் பெங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை மூன்று ப்ரோமோக்கள் வெளியாகி, மூன்றுமே கமலின் ஸ்டைலில் மிக சிறப்பாகவே வந்துள்ளது. அதே சமயம் இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் என்ற விவரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
ஷகீலாவின் மகளான மில்லா, நமீதா மாரிமுத்து இப்படி பலரின் பெயர்கள் ஏற்கனவே அடிபட்டுவரும் நிலையில், விஜய் டிவி புகழ் பிரியங்காவும் இதில் பங்கேற்க போகிறார்கள் என்ற செய்திகளும் வெளிவர துவங்கியுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, இப்போது புதிய அப்டேட் என்னவென்றால், சன் டீவி புகழ் இமான் அண்ணாச்சி இதில் போட்டியாளராக பங்கேற்கப்போகிறார் என்பது தான். தற்போது இந்த விவரம் சமூக வலைத்தளங்கில் வெளியாகி உள்ளது.
இம்மான் அண்ணாச்சியை பொறுத்தவரை, சன் தொலைக்காட்சியில் குட்டி சுட்டீஸ் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை ஆரம்ப காலத்தில் தொகுத்து வழங்கி வந்தார். அதனை தொடர்ச்சி அவர் சில படங்களிலும் காமெடியனாக நடித்துள்ளார். தனக்கே உரிய பாணியில் பேசி அனைவரையும் கவரும் பாங்கு இவரிடம் உள்ளது.
இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் அங்கு சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் பலரும் கூறிவருகின்றனர். அதே வேலையில் தொகுப்பாளர் பிரியங்கா, அவர் தொகுத்து வழங்கி வந்த எந்த ஒரு நிகழ்ச்சியையும் சில நாட்களாக தொகுத்து வழங்காததால் அவரும் பிக் பாஸ்ஸிற்குள் செல்வது உறுதி என்றே கூறப்படுகிறது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…