டிக்கிலோனா படத்தில் டெலீட் செய்யப்பட்ட காமெடி சீன். இது நல்லா தான இருக்கு இதை வச்சிருக்கலாமே என்று புலம்பிய ரசிகர்கள்.

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பலதரப்பட்ட ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் சந்தானம். சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். தனது கவுண்டர்(counter) வசனங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர், காமெடியனில் இருந்து ஹீரோ அவதாரம் எடுக்க தொடங்கினார்.

சமீபத்தில் OTT தலத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான படம் டிக்கிலோனா. இந்த படம் டைம் மெஷினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இதில் சந்தானம் டைம் மெஷின் மூலம் சில வருடங்கள் பின்னோக்கி சென்று தனது வாழ்வில் நடந்த சில விஷயங்களை மாற்றி அமைப்பார்.

இந்த படத்தை பொறுத்தவரை, யோகிபாபு உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் நடித்திருந்தனர். ஆனாலும் படத்தில் காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. மக்களிடையே இந்த படம் கலவையான விமர்சனனைகளையே பெற்றது. ஆனாலும் இந்த படத்தில் பலராலும் ரசிக்கப்பட்டது, லொள்ளு சபா மாறன் நடித்திருந்த கமெடிய சீன்கள் தான்.

அவரின் வசனமான “இன்னுமா நீ என்ன பைத்தியம்னு நெனைக்கற” என்ற வசனம் சமூக வலிதளங்களில் ட்ரெண்டானது. அதே சமயம் அவருக்கு படத்தில் இன்னும் நிறைய சீன் கொடுத்திருக்கலாம் என்று பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் நடித்து படத்தில் வராத சில காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த காட்சிகளை கண்ட ரசிகர்கள், இதை எல்லாம் ஏன் டெலீட் செய்தீர்கள். இந்த காட்சிகள் எல்லாம் இடம்பெற்றிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறிவருகின்றனர். சந்தானம் படங்களில் மட்டுமே அதிகமா காணப்படும் இவர் இனி வரும் காலங்களில் பிற நடிகர்களின் படங்களிலும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago