பிக் பாஸ்

நண்பனின் செயலை அப்படியே காப்பி செய்யும் ராஜு. கவினின் ரசிகர்கள் இவருக்கும் ஆதரவு கொடுப்பார்களா

பிக் பாஸ் சீசன் 5ன் முதல் நாளான நேற்று போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்த உடனே அவர்களைப் பற்றிய சிறிய வீடியோவும் காண்பிக்கப்பட்டது. போட்டியாளர்களை வரவேற்கும் வகையில் ஒவ்வொருவர் கையிலும் ஒரு சாக்லேட் டப்பா கொடுத்து அனுப்பப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டனர் இவ்வாறு ஐந்து போட்டியாளர்களை தொடர்ந்து ஆறாவதாக உள்நுழைந்த அவர்தான் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி.

super singer

விஜய் தொலைக் காட்சியில் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் வேறுயாரும் அல்ல பலருக்கும் பிடித்த விஜய் டிவி இன் பிரபலங்களில் ஒருவரான பிரியங்கா அவர்கள் தான். இவரின் சரவெடி பேச்சிர்க்கும் எதார்த்தமான சிரிப்பிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் டிவியின் காமெடி ராஜா கலக்கல் ராணி, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா. பிரியங்கா அவர்கள் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் கலகலப்பாக அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

பிக்பாஸ் வீட்டிற்குள் பிரியங்கா நுழையப் போவதாக செய்தி வெளியான உடனேயே ரசிகர்கள் பலருக்கும் பலவித எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் அவரின் நிகழ்ச்சிகளை மிஸ் செய்வதாகவும், ஒரு சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் அவரை காண ஆர்வமாக இருப்பதாகவும் தங்கள் பக்கத்தில் பலவித விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர்.

priyanka

இந்த சூழ்நிலையில்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார் தொகுப்பாளினி பிரியங்கா. அவர் வந்த உடனேயே அமைதியாக இருந்த பிக்பாஸ் வீடு சற்று உற்சாகமாகவும், கலகலப்பாகவும் மாறியது. அவரின் பட்டாசு போன்ற பேச்சும், சிரிப்பும் மற்றவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பிரியங்காவை தொடர்ந்து வந்த அனைத்து போட்டியாளர்களையும் மற்றவர்கள் அன்போடு வரவேற்று கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவ்வாறு உள்ளே வந்த நாட்டுப்புற பாடகி காமாட்சி அவர்களையும் சிறப்புடன் வரவேற்றார் பிரியங்கா.

இவர்களை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இருக்கிறார் நிரூப் அவர்கள். இவர் சொந்தமாக பிசினஸ் செய்து கொண்டு இருக்கிறார் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிப்புத்துறையில் நுழைவதற்காக பல்வேறு ஆடிஷன்களிலும் கலந்து இருக்கிறாராம். ஆனால் இவரின் தோற்றத்தை வைத்து இவருக்கு சென்ற இடங்களிலெல்லாம் தோல்விதான் ஏற்பட்டுள்ளதாம். இப்போது இவர் பிக்பாஸிற்க்கு வந்து இருப்பதற்கான காரணமும் இந்த நிகழ்ச்சியை வைத்து இவருக்கு நடிப்புத் துறையில் ஏதேனும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

niroop

இவர் நல்ல உயரத்துடன் சற்று நீளமான முடியுடன் பார்ப்பதற்கு இந்தி பட வில்லன் போன்று இருக்கிறார். இவருக்கு இருக்கும் அடர்த்தியான முடியை பார்த்து தனக்கும் இவ்வாறான முடி வேண்டும் என்று கூறினார். இதனைக் கேட்ட ராஜு உங்களுக்கு இருக்கின்ற முடியே நன்றாகத் தானே இருக்கிறது ஏன் அவரை பார்த்து ஜெலஸ் ஆகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதற்கு அசால்டாக தனது தலையிலிருந்த ஒப்பனை முடிகளை கழற்றி கையில் கொடுத்து விட்டார் நடிகை பிரியங்கா இதனைப் பார்த்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டது. வீட்டின் தலைவராக தகுதியுள்ள 5 பேர் அனைவரின் முன் நின்று கொண்டு தங்களின் திறமையை பற்றி கூறிக் கொண்டிருந்தனர். அதற்கு ராஜு அவர்கள் தான் பாத்ரூம் சிறப்பாக சுத்தம் செய்வேன் எனக் கூறினார். உடனே பிரியங்கா இங்கு எல்லோரும் ஒன்னானோம் பாத்ரூம் கழுவி பிரண்டானோம் என்று கமெண்ட் செய்தார். இவ்வாறு சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பிரியங்கா சொன்ன கமெண்ட்டிற்க்கு வீட்டில் உள்ள அனைவரும் வயிறு வலிக்க சிரித்தனர்.சென்ற சீசனில் ராஜுவின் நண்பரான கவின் அதிகமாக பாத்ரூம் கழுவும் டீமில் தான் இருந்திருக்கிறார். எனவே தன் நண்பரைப் போன்று இவரும் அதே செயலை காப்பி செய்ய முயற்சிக்கிறாரா என பலருக்கும் தோண்றுகிறது.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago