பிக் பாஸ்

யார் உயரம் என்ற போட்டியில் நமீதாவை தோற்கடித்த ராஜு. பிக் பாஸ் வீட்டில் நடந்த முதல் சம்பவமே அமர்க்களம் தான்.

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி அக்டோபர் 3 நேற்று முதல் நாளாக துவங்கப்ட்டது. சென்ற முறை நடந்த பிக் பாஸ் 4 டிஆர்பி யில் அதிக வசூலைக் கொடுத்தது. அதன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் அனைவரும் அடுத்த பிக் பாஸ் ஷோ வினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு சீசனிலும் உள்ளே வருகின்ற 16 நபர்களில் யார் வெற்றியாளர்களாக வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து கொண்டிருக்கும். அவ்வாறு பிக்பாஸ் நான்காம் சீசன் வெற்றியாளராக நடிகர் ஆரி அவர்கள் அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் 1 சீசனில் வெற்றியாளராக இல்லாவிட்டாலும் ஓவியா தான் அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். அதன் பிறகு அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆரி அவர்கள்தான்.

isaianiv

நேற்று கமல் அவர்கள் முதலில் பிக்பாஸ் வீட்டைச்சுற்றி காண்பித்து அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாளர்களாக அறிவித்து அவர்களை வரவேற்றார். முதல் போட்டியாளராக சென்னை ராயபுரம் கிளைபேட்ரியை சேர்ந்த கானா புகழ் இசைவாணி அவர்கள் தனது கானா பாடலுடன் அவரின் பிக் பாஸ் பயணத்தை துவங்கினார்.

இரண்டாவதாக விஜய் டிவியின் உச்சத்தைத் தொட்ட வெற்றி சீரியலான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த ராஜூ அவர்கள் வரவேற்கப்பட்டார். இவர் பல சின்னத்திரை தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில நடிகர்களை போன்று மிமிக்ரி செய்வதில் வல்லவர் ஆவார். பாக்கியராஜ் அவர்கள் போன்று தனது குரலை மாற்றி பேசி காண்பித்தார். இதனை வீடியோ மூலம் பார்த்து ரசித்த பாக்கியராஜ் அவர்களும் வாழ்த்துக்கள் கூறி ராஜுவை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

abisheik

மூன்றாவதாக ஆர்ஜே அபிஷேக் அவர்கள் தோன்றினார். இவர் பல முன்னணி நடிகர்களை பேட்டி எடுத்துள்ளார். இவரின் இயல்பான பேச்சும், துடிப்பான நடவடிக்கையும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும்.

நான்காவதாக ஜெர்மனியை சேர்ந்த ஆடை அலங்கார அழகி ஒருவர் இடம் பெற்றார். இவர் இலங்கையை சேர்ந்தவராம். தற்போது குடும்பத்துடன் ஜெர்மனியில் வசித்து வருகிறார்கள். இவர் ஒரு வருடம் ஆஸ்திரேலியா சென்று ஆடை அலங்கார நிபுணராக பணியாற்றி தற்போது சென்னையில் சினிமா துறையில் நட்சத்திரங்களுக்கு ஆடை அலங்காரம் செய்பவராக இருக்கிறார்.

namitha

ஐந்தாவதாக வரவேற்கப்பட்டவர் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு திருநங்கைகளுக்கான மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற நமிதா அவர்கள். இவர் ஒரு திருநங்கை ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது இன்ஜினியர் பட்டப்படிப்பின் நான்காவது வருடத்தில் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி வீட்டை விட்டு வெளியில் சென்றார். அதன்பிறகு தனது விருப்பத்திற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொண்டார். தற்போது பெற்றோர்களுடன் சேர்ந்து இருக்கும் நமிதா மிஸ் சென்னை, மிஸ் தமிழ்நாடு போன்ற பட்டங்களை வென்றிருக்கிறார்.

Raju bibb boss Tamil

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனே அனைவரும் இவரது உயரத்தை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் காலில் ஹுல்ஸ் அணிந்து இருந்ததால் இன்னும் அதிக உயரத்தில் இருந்தார். அபிஷேக் அவர்கள் இதனை போடுவதற்கென்று ஒரு பக்குவம் இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு நமிதாவும் நிச்சயம் பயிற்சி இல்லாமல் ஹீல்ஸ் போட்டு நடப்பது கடினமான விஷயம் தான் என்று கூறினார். இவர்கள் அனைவரும் நமிதாவின் உயரத்தை பற்றி பேச நமிதா உடனே தனது செருப்பை கழட்டி வைத்தார். ராஜீவுடன்டன் நின்று தனது உயரத்தை அளந்து பார்த்த பொழுது அதில் ராஜு அவர்களே வெற்றி பெற்றார்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago