தமிழ் திரை உலகில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சிவ கார்த்திகேயன், விமல், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான நகைச்சுவை சூப்பர் ஹிட் திரைப்படம் “கேடி பில்லா கில்லாடி ரங்கா”. இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நகைச்சுவை கலந்த கதாநாயகி வேடத்தில் நடித்து அசத்தியவர் நடிகை பிந்து மாதவி.
36 வயதாகும் நடிகை பிந்து மாதவி ஆந்திர மாநிலம் மடனபல்லேவில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். தமிழ் திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வந்த நடிகை பிந்து மாதவி ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். தமிழ் திரை உலகை விட தெலுங்கு திரை உலகில் கிளாமராக நடித்தாலும் தொடர்ந்து தமிழ் திரை உலகில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வந்தார் நடிகை பிந்து மாதவி.
கடந்த 2008ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் இயக்குநர் அனீஷ் குருவிலா இயக்கத்தில் வெளியான “ஆவக்காய் பிரியானி” படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடதக்கது. தன் முதல் படத்திலே நீச்சல் உடையில் நடித்து அசத்திய பிந்து மாதவிக்கு தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை. இதன் காரணமாக தமிழ் திரை உலகிற்கு வந்த நடிகை பிந்து மாதவி கடந்த 2009ஆம் ஆண்டு நடிகர் சேரன் இயக்கி நடித்த “பொக்கிஷம்” படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ் திரை உலகில் நடித்து வந்த நடிகை பிந்து மாதவிக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகை பிந்து மாதவி “ஜாக்ஷன் துரை”, “பக்கா” மற்றும் “கழுகு 2” ஆகிய 3 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடந்த 2019ஆண்டு முதல் பட வாய்ப்புகள் ஏதும் இன்றி புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார் நடிகை பிந்து மாதவி.
கொரோனா லாக் டவுன் முடிந்து சினிமா உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின் நடிகை பிந்து மாதவி தொடர்ந்து பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்று வந்தார். இதன் பயனாக இந்த ஆண்டு நடிகை பிந்து மாதவி “யாருக்கும் அஞ்சேள்”, “மாயன்” மற்றும் “பகைவனுக்கு அருள்வாய்” ஆகிய 3 புதிய தமிழ் படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த 3 படங்களில் “யாருக்கும் அஞ்சேள்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற சைமா (SIIMA Awarda) விருதுகள் 20022 விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி அசத்தலான ஸ்டிராப்லெஸ் ஆடையில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கியுள்ளார்.
இது மட்டுமின்றி இந்த விருது வழங்கும் விழாவின் இடையே நடிகை பிந்து மாதவி ஒரு பிரத்யேக போட்டோஷூட்டிலும் பங்கேற்றுள்ளார். நடிகை பிந்து மாதவியின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…