தமிழ் திரை உலகில் கடந்த 2019ஆம் ஆண்டு நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் குப்பத்து ராஜா. இந்த படத்தில் நாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் இளம் நடிகை பலாக் லால்வானி, வயது 26, உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல்.
நடிகை பலாக் லால்வானி கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் நடிகர் நாக ஷவுர்யா நாயகனாக நடித்து வெளியான “அபாயிதோ அம்மாயி” என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இவர் கடைசியாக தமிழ் திரை உலகில் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குநர் சாச்சி இயக்கத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடித்து வெளியான சிக்சர் படத்தில் நடித்திருந்தார்.
2019ஆம் ஆண்டு இறுதியில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக “சினம்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் கொரொனா லாக் டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தபட்டது. இதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நடிகை பலாக் லால்வானி தொடர்ந்து புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். அவ்வப்போது தன்னுடைய பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களையும் க்ளிக் செய்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் நடிகை பலாக் லால்வானி.
கடந்த ஆண்டு இயக்குநர் GNR. குமரவேலன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் “சினம்” படத்தின் படப்பிடிப்பு தொங்கி நடைபெற்று வந்தது. இந்த படத்தில் நடிகை பலாக் லால்வாணி நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாகவும் பலாக் லாலவானி அவரது மனைவியாகவும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் நடிகை பலாக் லால்வானி “பார்ட்னர்”, மற்றும் “தலை நகரம்” ஆகிய இரு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 3 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த நிலையில் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததால் நடிகை பலாக் லால்வானி இரட்டிப்பு சந்தோசத்தில் உள்ளார்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…