பொழுதுபோக்கு

சம்பள விஷயத்தில் கராரான விஜய் சேதுபதி படபடத்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின் தனது கடின உழைப்பால் நடிகராக உயர்ந்தவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. பிஸியான நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்சேதுபதி வருடத்திற்கு குறைந்து பத்து படங்களிலாவது நடித்து விடுவார்.

விஜய்சேதுபதி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் தடம் பதித்துள்ளார். தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த விஜய்சேதுபதி தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

விஜய்சேதுபதி திரைப்படங்களை தவிர வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். வெப் சீரிஸும் திரைப்படங்களை போன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு பெற்று வருவதால் வெப் சீரிஸிலும் நடிக்க விஜய்சேதுபதி ஆர்வம் காட்டிவருகிறார். அதன்படி ஒரு வெப் சீரிஸ் குழுவினர் விஜய்சேதுபதியை அணுகி கதையை கூறியுள்ளனர். இதன் கதையை கேட்டவுடன் விஜய்சேதுபதிக்கு பிடித்துப்போய் அக்குழுவினருடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டார்.

ஆனால் வெப் சீரிஸில் நடிப்பதற்கு தனக்கு சம்பளமாக ரூ.30 கோடி வழங்க வேண்டுமென கேட்டுகொண்டதாகவும் இதைக்கேட்டு இயக்குநர், தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் விஜய்சேதுபதி தற்போது தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சிலமாதங்களாகவே சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் தங்களது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியான வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago