நடிச்சதோ ஒரு படம். சிம்பு வீட்டில் டேரா போட்ட அம்மணி!

தமிழ் திரையுலகில் காதல் கிசுகிசுக்கும் சர்ச்சைக்கும் பெயர் போனவர் நடிகர் சிம்பு. இவரை வைத்து படம் இயக்குவது அவ்வளவு எளிதல்ல என சிம்புவைத்து படம் இயக்குநர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை இவர் மீது அடுக்கு அடுக்காக வைப்பதும் வழக்கமான ஒன்றுதான்.

simbu

சிம்புவுக்கு நீண்டநாள்களுக்கு பின் பெயர் வாங்கி கொடுத்தப்படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.’மாநாடு’ படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ‘மாநாடு’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

சிம்பு தற்போது ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரனா குமார்’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஏற்கனவே திரையுலகில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, ஹன்சிகாவுடன் சிம்பு காதல் உறவில் இருந்தநிலையில், சில காரணங்களால் அவர்களை விட்டு பிரிந்தார்.

இந்தநிலையில், சிம்பு இப்போது வளர்ந்து வரும் இளம் நடிகையான நிதி அகர்வாலை காதலிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தில் சிம்புவும், நிதி அகர்வாலும் ஒன்றாக இணைந்து நடித்தனர்.ஈஸ்வரன் படத்தின் படிப்பில் சிம்புவுக்கும் நிதிக்கும் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி இவர்கள் நட்பு வளர்ந்து வந்து சிம்புவின் வீட்டிலேயே நிதி அகர்வால் தங்கும் அளவிற்கு உள்ளது.

சமீபத்தில் சிம்பு வீட்டில் தங்கிய நிதி அகர்வால், மும்பையில், மாநாடு படத்தின் சிறப்பு காட்சி திரையிடலின் போது மாநாடு படக்குழுவினருடன் நிதி அகர்வாலும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

தற்போது வளர்ந்து வரும் நிதி அகர்வால் சில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரை தமிழ் ரசிகர்கள் வெகுவாக வரவேற்று சிலை வைத்து வழிபட தொடங்கினர். இந்த நிலையில் நிதி – சிம்பு காதல் உண்மைதானா? அல்லது வதந்தியா? இன்னும் சிங்கிளாக இருக்கும் சிம்பு நிதியை கரம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

முன்னதாக நிதி அகர்வால் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுடன் நட்பில் இருந்து அது பின் விரிசலடைந்தது குறிப்பிடத்தக்கது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago