பொழுதுபோக்கு

விஜய்யை அசத்திய இயக்குநர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – தயாரிப்பாளர் பகீர் பேச்சு

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீஸ்ட்’ படப்பிடிப்பு முடிந்த பின் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கவுள்ளார்.

சமீபகாலமாக விஜய் தான் நடிக்கும் படத்தில் அரசியல் குறித்தான விழிப்புணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் விதம் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ‘தளபதி 66’ படமும் அமையும் என தெரியவந்ததுள்ளது. ‘தளபதி 66’ படத்துக்காக தமிழில் அனல்பறக்கும் அரசியல் வசனங்களை பிரபல இயக்குநர் ராஜூ முருகன் எழுதும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ” எனது திரை வாழ்க்கையில் தளபதி 66 திரைப்படம் மிக முக்கியமானது. இப்படத்திற்காக பிரம்மாண்டமான காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். தளபதி 66 படத்தின் கதை விஜய்க்கு ரொம்ப பிடித்துவிட்டது.

இப்படத்தின் கதையை வம்சி விஜய்யிடம் கூறிய பின், இதுதான் நான் கடந்த 20 வருடத்தில் கேட்ட சிறந்த கதை. இப்படி ஒரு குடும்ப கதையை நான் கேட்டதில்லை என விஜய் கூறினார். அந்த அளவிற்கு படத்தின் கதையை இயக்குநர் வம்சி நன்றாக செதுக்கியுள்ளார்.

படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு பிடிக்கும். இப்படத்தை தீபாவளிக்கு வெளியட திட்டமிட்டுள்ளோம். படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கவுள்ளது” என்று கூறினார்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago