இது சரியவரல.. பாதியில் கைவிடப்பட்ட ‘பாகுபலி 3’: எவ்வளவு கோடி நஷ்டம்னு தெரியுமா?

ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியானப் படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தெலுங்கில் உருவான ‘பாகுபலி’ தமிழ், மலையாளம், இந்தி என இந்தியா மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள மொழிகளிலும் வெளியானது. வித்யாசமான கதைகளம், விஎஃப்எக்ஸ், ஒளிப்பதிவு என படம் முழுவதும் ரசிகர்களை ஆச்சரியப்படவைத்தது.

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் வசூலில் சாதனை புரிந்தது. ‘பாகுபலி 2’ திரைப்பட வசூல் தென்னிந்தியளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் முதலாவதாக உள்ளது. இப்படத்தில் பணியாற்றி அனைத்து நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் மற்ற படங்கள் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுகின்றன.

‘பாகுபலி’ வெற்றியை தொடர்ந்து ராஜமெளலி, தற்போது ராம் சரண், ஜூனியர் என்டிஆர்யை வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்னும் பிரம்மாண்ட படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் அனைத்து கட்ட பணிகளும் நிறைவடைந்து வெளியிட்டுக்கு தயாராகவுள்ளது. ஆனால் தற்போது கரோனா பரவல் காரணமாக வெளியிடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 இல் வெளியாகிறது.

இந்நிலையில், ‘பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் பாதியிலே கைவிடப்பட்டதாக தகவல் தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. அதாவது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ‘பாகுபலி பிஃபோர் தி பிகினிங் (Baahubali: Before the Beginning)’ என்னும் சீரிஸை உருவாக்க திட்டமிட்டபட்டிருந்தது. அதற்காக ரூ 150 கோடியில் ஆறு மாதம் படப்பிடிப்பை நடத்தினர். ஆனால் மேக்கிங், இறுதி பதிப்பு சரியாக வராததால் இந்த ப்ராஜெக்ட்டை கைவிடப்பட்டுள்ளது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago