பொழுதுபோக்கு

அஜித் படத்துக்கு வந்த கூட்டத்தை பார்த்து மிரண்டு போன விஜய்.. அது எந்தப் படம்னு தெரியுமா?

அஜித் – விஜய், தமிழ் சினிமாவில் செல்லமாக தல – தளபதி என ரசிகர்கள் அழைப்பர். சமீபத்தில் அஜித் கூட தன்னை யாரும தல என அழைக்க வேண்டாம் என கூறினார். இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் ஏரளாமாக உள்ளனர்.

விஜய் – அஜித் 1995ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’ என்னும் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். அதன் பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவில்லையென்றாலும் கூடஇருவரும் பல முறை தங்களது படங்களின் மூலம் மோதி உள்ளனர்.

அஜித், விஜய் படங்கள் வெளியாகிறது என்றால் அது தமிழ்நாடு முழுவதும் விழா கோலம் போன்று இருக்கும் இந்த நிலையில், 2001ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ்’, அஜித்தின் ‘தீனா’ இருபடங்களும் ஒன்றாக வெளியானது.

‘ப்ரண்ட்ஸ்’ மலையாளத்தில் ஹிட் அடித்த படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை மலையாளத்திலும் தமிழிலும் சித்திக் இயக்கினார். ‘தீனா’ இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் முதல் படமாகும். ‘தீனா’ அஜித்துக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

‘தீனா’ வெளியான முதல் வாரம் திரையரங்கு முழுவதும் ஹவுஸ்ஃபுல் காட்சியாக ஒடியது. ‘ப்ரண்ட்ஸ்’ போதிய கூட்டம் இல்லாமல் இருந்தது. இதைப்பார்த்த விஜய், தயாரிப்பாளர் அப்பச்சன் சோகத்தில் இருந்தனர். அப்போது விஜய் முதல் வாரத்தை விட்டுதள்ளுங்கள், இரண்டாவது வாரம் நமது படம் நன்றாக ஓடி ஹிட் அடிக்கும் என்றார். அதே போன்று இரண்டாவது வாரம் ‘ப்ரண்ட்ஸ்’ வெற்றிகரமாக ஓடி ஹிட் கொடுத்தது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago