“பாகுபலி” இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரயோ சரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் இப்பட்டத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.
“ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் பாடலான “நாட்டு கூத்து” சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை நடனமாடி அதன் வீடியோக்ககளை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
“ஆர்ஆர்ஆர்” திரைப்படம் முதலில் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான விளம்பர பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையும் ஆரம்பமானது.
இந்நிலையில், தற்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநில அரசுகள், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், “ஆர்ஆர்ஆர்” படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர்.
ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்தற்காக ஜூனியர் என்டிஆர், ராம்சரணுக்கு தலா ரூ.50 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதே போல் ஆலியா பட்டிற்கு ரூ.9 கோடியும்15 நமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் பாலிவுட் அஜய் தேவ்கனக்கு ரூ.35 கோடி சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…