பொழுதுபோக்கு

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகையுடன் தன் பிறந்தநாளை கொண்டாடிய வைகை புயல்.

தமிழ் சினிமா உலகில் வைகை புயல் என்ற பட்டத்தை பெற்றவர் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, இவருடைய இயற் பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு நடிகர் டி.ராஜேந்தர் நடிப்பில் வெளியான “என் தங்கை கல்யாணி” என்ற படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.

Vadivelu Birthday Celebrations @ Maamannan Shooting Spot

கடின உழைப்பால் தமிழ் சினிமா உலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கான இடத்தை பிடித்தார் நடிகர் வடிவேலு. முதலில் நடிகர் வடிவேலு, கவுண்டமனி-செந்திலுடன் சேர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் தனியாக நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்று தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவனாக வலம் வருகிறார்.

தற்போது தமிழ் சினிமா உலகில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஃபாஹத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மாமன்னன்”. இந்த படத்தின் நகைச்சுவை வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார்.

Vadivelu Birthday Celebrations @ Maamannan Shooting Spot

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பை வெற்றிகரமாக முடிவடைந்ததை கொண்டாடும் விதமாக விராப்-அப் பார்ட்டி சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த பார்ட்டியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஃபாஹத் ஃபாசில், வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ், மற்றும் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

இன்று (செப்டம்பர் 13) தன்னுடைய 61வது பிறந்த நாளை வைகைப்புயல் வடிவேலு கொண்டாடுகிறார், இதனை நேற்று “மாமன்னன்” படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஃபாஹத் ஃபாசில், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட அனைவரும் வைகைப்புயல் வடிவேலுவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago