மூவிகள்

ஜோதிகாவின் புதிய பரிமாணத்தில் வெளிவந்த உடன்பிறப்பே பட டிரைலரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இப்படத்தில் சமுத்திரக்கனி தான் வில்லனா

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ஜோதிகா இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஆனால் 36 என்ற படத்தின் மூலம் திரையில் மீண்டும் களமிறங்கினார் ஜோதிகா இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது இதனைத் தொடர்ந்து சமூகத்தில் பெண்களுக்கான உயர்ந்த நிலையை சொல்லும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்துக்கொண்டிருக்கிறார் ஜோதிகா.

jothika

அவ்வாறு அவர் நடித்த நாச்சியார், மகளிர் மட்டும், பொன்மகள்வந்தாள், காற்றின் மொழி, ராட்சசி போன்ற படங்கள் அனைத்தும் பெண்களின் சிறப்புகளை சொல்லக்கூடிய படங்களாக இருந்தன. இவை அனைத்தும் ஜோதிகாவிற்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. இதனை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடிக்கத் துவங்கியுள்ளார் ஜோதிகா. இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் கதையின் முக்கியத்துவத்தை வைத்தே அவர் படங்களை தேர்வு செய்கிறார்.

அது போல் நடிகர் சசிகுமார் அவர்களும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் சில நாட்களாக அவர் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. சசிகுமார் அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது ஜோதிகாவுடன் சேர்ந்து உடன் பிறப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். எனவே சசிகுமார் ஆகவே அவரின் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.

அவ்வாறு லாக்டௌன் முடிந்து தற்போது திரைக்கு வர இருக்கும் உடன்பிறப்பே என்ற திரைப்படம் ரசிகர்கள் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. சிறிது நாட்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் புகைப்படங்கள் வெளியாகின. அதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அவ்வாறு இதனைத் தொடர்ந்து இப்போது இப்படத்தின் ட்ரெய்லர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

டைரக்டர் சரவணன் இயக்கத்தில் எடுக்கப்படும் இப்படம் புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றிய பகுதிகளில் தான் படமாக்கப்படுகிறது இப்படத்தில் சசிகுமார் மற்றும் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் சூரி பல நடிகர்களும் நடித்துள்ளார்கள் இப்படம் அண்ணன் தங்கை பாசத்தையும் அவர்கள் குடும்ப சூழ்நிலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

udanpirappu

இப்படத்திற்க்கு சூர்யா மற்றும் ஜோதிகா தான் தயாரிப்பாளர்கள். சூர்யாவின் 2டி அனிமேஷன் என்டர்டைன்மெண்ட் கம்பெனி மூலம் படம் நேரடியாக அமேசன் பிரைமில் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. முதலில் இப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சிக்கலான சூழ்நிலை காரணமாக OTT வலைதளத்தில் வெளியிட போவதாக சூர்யா அவர்கள் முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள உடன்பிறப்பு படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் பெரிதளவு வைரலாகி கொண்டு வருகிறது.

இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்த்தோமென்றால் ஜோதிகா, சசி குமார் அண்ணன் தங்கையாகவும், ஜோதிகாவின் கணவராக சமுத்திரகனி அவர்களும் நடித்துள்ளார்கள். சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் இடையே நல்ல உறவு முறை இல்லாததால் ஜோதிகா அவரது அண்ணனான சசிகுமாரிடம் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார். இதனை வைத்து பார்த்தோமென்றால் இப்படத்தின் வில்லனாக சமுத்திரகனி இருக்கலாம் என்றும் அனைவராலும் பேசப்படுகிறது.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago