தற்போது சமூக வலைத்தளங்களை மக்கள் அதிகள் அளவில் பயன்படுத்துவதால். டீவி நிகழ்ச்சிகளை பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. இதானால் டிவி சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதிய புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து மக்களை தங்கள் சேனலை பார்க்க வைக்க பெரும் முயற்சி எடுக்கின்றனர்.
குறிப்பாக, பல சேனல்கள் தற்போது திரை நட்சத்திரங்களை ஷோவில் களம் இறக்கி அதன் மூலம் மக்களை கவர்கின்றன. இந்த ஐடியா ஒரு சக்ஸஸ் பார்முலா என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நாம் அறியலாம். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 1 முதல், இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 5 வரை அதனை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.
விஜய் டிவியை தொடர்ந்து, சன் தொலைக்காட்சி “மாஸ்டர் செஃப்” என்ற ஒரு சமையல் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியை களம் இறக்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியும் தற்போது கலவையான விமர்சனங்களோடு ஓர் அளவிற்கு நன்றாகவே சென்றுகொண்டிருக்கிறது.
இந்த இரு சேனல்களையும் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி நடிகர் அர்ஜுனை சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் களம் இறக்கி உள்ளது. பிக் பாசை போலவே இந்த போட்டியும் பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
இப்படி ஒவ்வொரு சேனலும் ஒரு நட்சத்திரைத்தை கொண்டு ஷோ நடத்த, அந்த நட்சத்திரங்களுக்கான சம்பளம் வேற லெவலில் உள்ளது. பிக் போஸ்ஸை தொகுத்து வழங்க கமல் அவர்கள் சுமார் 60 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடிர்க்கும் விஜய் சேதுபதி ரூபாய் 50 லட்சம் சம்பளம் பெறுவதாகவும், நடிகர் அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 5 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…