நடிகை பிரியா பவானி சங்கரின் ஆரம்பகாலம் செய்தி வாசிப்பாளராக தொடங்கியது. பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை எனற சீரியலில் 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தார். அந்த சீரியலில் குயிலியுடன் இவர் மாமியார் மருமகள் சண்டை போட்டிருப்பார்.
பின்னர் நடிகர் வைபவ் உடன் மேயாதமான் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிளம்ப கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரின் அத்தை மகளாக நடித்து அனைவரின் நெஞ்சத்தியும் கவர்ந்தார். பின்னர் எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எலியை மையமாக வைத்து எடுத்த திரைப்படம் ஆகும்.
இடையில் இவர் காதல் திருமணம் செய்யப்போகிறார் என்ற வதந்தி கிளம்பியது. அதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர், காதல் செய்கிறேன் திருமணம் இப்போது இல்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த கொரோனா சமயத்தில் மொட்டைமாடியிலேயே விதவிதமான போட்டோக்களை அவர் எடுத்து அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுக்கொண்டிருந்தார். இவரது கலர் சென்ஸ், நியூ டிரஸ் கலெக்க்ஷன்ஸ், டயட், உடற்பயிற்சி என தனக்கு தோன்றும் போதெல்லாம் போட்டோக்களை போட்டி போட்டுகொண்டு பதிவேற்றினார். அதற்கும் கன்னா பின்னாவென லைக்ஸுகளும் கமென்ட்டுகளும் குவிந்தன .
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் வடிவேலுவுடன் சோபாவில் அமர்ந்திருப்பது போல புகைப்படத்தை இவர் வெளியிட்டுள்ளார். இது ஒருவேளை எலி பார்ட் 2 வுக்கான விளம்பரமா இல்லை வேறுபடத்திற்கான விளம்பரமா என ரசிகர்கள் குழம்பினர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாவதால் ஒருவேளை புதுப்பட ஒப்பந்தம் இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகம் கொண்டனர். பின்னர் பதிலளித்த பிரியா பவானி சங்கர், இது ரசிகர் ஒருவர் தனக்கு அனுப்பிய புகைப்படம். நன்றாக இருந்ததால் ஷேர் செய்தேன் என உண்மையை உடைத்துள்ளார். அதற்குள் வடிவேலுவுக்கு ஹீரோயினா பார்ட் 2 வா என்று எத்தனை கேள்விகள். அப்போ அவருடன் ஹீரோயினா நடிக்கலயா என்ன ரசிகர்கள் கடைசியில் ஏமாந்து விட்டனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…