பிக் பாஸ் ஓவியாவோடு புதிய படத்தில் நடிக்கும் முத்து அண்ணாச்சி. எந்த படம் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் ஒன்று மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் நடிகை ஓவியா. இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். அந்த சமயத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட ஓவியா, பல்வேறு திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓர் இரு படங்களை தவறிய பெரிதாக எதிலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் ஓவியா, காமெடி நடிகர் யோகி பாபுவோடு இனைந்து “காண்ட்ராக்டர் நேசமணி” என்னும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் டிக் டாக் புகழ் ஜி.பி முத்துவும் உள்ளார். இந்த படத்தை ஸ்வதீஷ் இயக்குகிறார். தர்மம் பிரகாஷ் மற்றும் சுபாஷ் தண்டபாணி இதற்க்கு இசை அமைக்க உள்ளனர்.

காண்ட்ராக்டர் நேசமணி என்ற பெயர் சமீபத்தில் உலகப்புகழ் பெற்ற பெயராக மாறியது. வடிவேலு நடித்த பிரண்ட்ஸ் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் தான் இது. சுத்தியல் என்ற வார்த்தையால் இது உலகம் முழுக்க ட்ரெண்டானது குறிப்பிட தக்கது.

ஜி.பி முத்துவை பொறுத்தவரை ஏற்கனவே சன்னி லியோன் படத்தில் அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது அவர் காண்ட்ராக்டர் நேசமணி படத்தில் நடிப்பதும் உறுதியாகி உள்ளது. இந்த படத்துக்கான பூஜை இன்று(செப் 24) தான் போடப்பட்டது.

இந்த படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. பிரபல இனைய தொடரான மணி ஹேய்ஸ்ட் மற்றும் ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் முகங்களை கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்க பட்டுள்ளது. இதை திரை பிரபலங்கள் பலர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago