தனுஷின் ஹீரோயின் மாலத்தீவில் ஹாட் போட்டோஷூட்

கொரோனாவால் ஒரு பக்கம் சினிமா தொழில் முடங்கிக்கிடக்கின்றது என்று சொல்கின்றனர். ஆனால் நடிகர், நடிகைகள் இந்த விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு சில சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்ச்சியோடு நேரத்தை செலவு செய்கின்றனர். அதிலும் சில நடிகைகள் கடற்கரை தீவுகளுக்குச் சென்று தங்களது ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் சூடாக்குகின்றனர்.

தற்பொழுது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுடன் ஜோடி போட்ட நடிகை மேகா ஆகாஷ் மாலத்தீவுக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியான இப்புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கௌதம் மேனன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ் தொடர்ந்து அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்த சூழ்நிலையில் எனை நோக்கிப் தோட்டா படம் சரிவர கல்லா கட்டாததால் அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு வரவில்லை. ஆனாலும் பலர் தனுஷிற்கு ஏற்ற ஜோடி மேகா ஆகாஷ் என புகழ்ந்து தள்ளினர். ஒரேசமயத்தில் தனுஷ் சிம்பு என இருவருக்கும் ஹீரோயினாக நடித்த சந்தோஷத்தில் அடுத்தடுத்த படங்களின் கதைகளை சரியாக தேர்வு செய்யவில்லையோ என மேகா ஆகாஷிடம் சிலர் நேரடியாகவே கேட்டுள்ளனராம். பின்னர் சிம்புவோடு இவர் நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வசூல் ரீதியாக வென்றாலும் அந்தப் படம் ரிலீஸ் ஆகும் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக ராசியில்லாத ஹீரோயின் என்ற பெயர் இவருக்கு வந்தது. அதனால்தானோ என்னவோ அடுத்தடுத்த படங்களில் இவரால் நடிக்க முடியாமல் போயிற்று.

பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2019-ல் நடிகர் அதர்வாவுடன் பூமராங் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்தற்பொழுது விட்ட சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக மிகவும் கவர்ச்சியான போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் உலக விடுகிறார் நடிகை மேகா ஆகாஷ். மார்க்கெட்டை இழந்த பல நடிகைகள்  இழந்த மார்க்கெட்டைதிரும்பப் பெற செய்யும் உத்தியை இவரும் கையாள்கிறார்.

தற்போது மாலத்தீவுக்கு சென்றிருக்கும் இவர் விதவிதமான போட்டோக்களை எடுத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுருக்கிறார். இந்த புகைப்படங்கள் அவரது சினிமா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறார் போலும்.இந்த சென்னை பொண்ணு எத்தனை சுற்றுலா தளம் சென்றாலும் மாலத்தீவு தான் அவருடைய ஃபேவரைட் என்று கூறுகிறார். இவர்மட்டுமல்ல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் விடுமுறை நாட்களுக்கு தங்களுடைய பொழுதைக் கழிக்க மாலத்தீவுக்கு பறந்து விடுகின்றனர். பரபரப்பான சூட்டிங் நாட்களுக்கு மத்தியில் மனதை ஒருநிலைப்படுத்த இந்த மாதிரியான ஒரு சுற்றுலா அவர்களுக்கு தேவைப்படத்தான் செய்கிறது.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago