Categories: மூவிகள்

அடேங்கப்பா இவருடன் இவரா? உலக நாயகனுடன் கைகோர்க்கும் வெற்றி இயக்குனர். இக் கூட்டணி வெற்றிக் கூட்டணி ஆகுமா ?

சமீப காலமாக உலக நாயகனின் பெயர் பல இடங்களில் அடி பட்டு வருகின்றது. மக்கள் நீதி மையம் என்று தனக்கென ஒரு தனிக் கட்சியை உருவாக்கி நடத்தி வந்த திரு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இந்தத் தேர்தல் தோல்வியை தந்தது. மேலும் கட்சியின் பிரதிநிதிகள் பல்வேறு காரணங்களால் கட்சியை விட்டு விலகவும் செய்தனர். இருந்தாலும் கலங்காத திரு கமல்ஹாசன் அவர்கள் தன் பணியை செவ்வனே செய்து கொண்டு வருகிறார். கட்சி பணிகள் ஒருபுறம் இருக்க கமலஹாசன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குபவராக இருக்கிறார்.

kamal

கடந்த நான்கு சீசன் களும் கமலஹாசன் அவர்களே தொகுப்பாளராக இருந்தார். இதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெறுகிறார். இதுவும் அடிக்கடி மக்களிடையே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. என்ன இருந்தாலும் ஒரே கல்லில் இரண்டு மாங்காவாக தனது கட்சிக்கு சின்னத்திரையின் வாயிலாக விளம்பரம் செய்து கொண்டு அதே சமயத்தில் தனது வேலையும் செய்து வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில் கமல்ஹாசன் அவர்கள் இயக்குனர் லோகேஷ் அவர்களுடன் விக்ரம் பட படிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இயக்குனர் லோகேஷ் வளர்ந்துவரும் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் ஆவார். அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் அவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல் உலக நாயகன் கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை நன்கு தக்கவைத்துக் கொண்ட லோகேஷ் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலையை முழுமையாக மேற்கொண்டு வருகிறார்.மேலும் இப்படம் சீரியஸ் கலந்த திரில்லர் படமாக இருக்கும் என்று படக் குழுவின் மூலம் வெளியிட்ட டீசரை பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

dhanush

அதோடு மட்டுமல்லாமல் தற்போது கமல்ஹாசன் பற்றி பெரிய பிரேக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் உலகநாயகன் கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் என்பதுதான் தான். தனது எதார்த்தமான இயக்கத்தின் மூலம் பல வெற்றிகளை கொடுத்த திரு வெற்றிமாறன் அவர்கள் கமல் ஹாசனுடன் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற புதிய தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இக்கூட்டணி ஒரு பிரமாண்ட கூட்டணியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.வெற்றிமாறன் தன் கதையை முன்னிலைப்படுத்தி படம் எடுப்பவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் இக் கூட்டணியின் வெற்றியை காண்பதற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படத்திற்கான வேலைகள் துவங்கிவிட்டாலே இவர்களின் வெற்றியைப் பற்றி படம் ரிலீசாவதறக்கு முன்பே நம்மால் யூகித்துவிட முடியும். இன்றைய சூழலில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி சிறந்த கூட்டணியாக இருக்கும் பட்சத்தில்.. அதை முறியடிக்குமா கமல்ஹாசனும் வெற்றிமாறனும் சேர்ந்திருக்கும் இந்த புதிய கூட்டணி என்ற கேள்விகளை ரசிகர்கள் ஆர்வமாக பதிவிட்டு வருகின்றனர்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago