tik tok ilakkiya
டிக் டாக் பிரபலங்கள் பலர் இன்று யுடீயுபில் பிரபலமாக இருக்கையில் ஒரு சிலர் மட்டும் திரை துறையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். அதில் ஒருவர் தான் இலக்கியா. இவர் ‘நீ சுடத்தான் வந்தியா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படம் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டு தற்போது ரிலீசிற்கு தயாராக உள்ளது. இந்த படம் குறித்த பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
இந்த படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளரான அருண் குமார் இந்த படம் குறித்து கூறுகையில், தான் முதலில் இந்த படத்தை தயாரிக்க மட்டுமே முயன்றதாகவும் ஆனால் படத்தில் ஹீரோவாக நடிக்க சரியான நடிகர் கிடைக்காததால் வேறு வழி இன்றி தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்து, அதற்காக கூத்து பட்டறையில் பயிற்சி எடுத்துக்கொண்டு பின்பு நடிக்க துவங்கியதாகவும் கூறி உள்ளார்.
இந்த படத்தை பொறுத்தவரை, விஜய் டிவி தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாங்கச்சி இப்படி பல நடிகர்கள் உள்ளனர். இந்த படத்தை துரைராஜ் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து டிக் டாக் இலக்கியா கூறுகையில், தனக்கு படத்தில் நடிக்க ஆசை இருந்தாலும் நடிப்பு என்பது இவளவு சிரமமாக இருக்கும் என்பதை இந்த படத்தில் நடித்தபிறகு தான் அறிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.
அதே சமயம், அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் ட்ரைலர் யுடீயுபில் இதுவரை 5 லட்சம் பார்வையாளர்களை கடநதுள்ளது. இலக்கியா இந்த படத்தில் நடிக்க ஆரமித்தது முதல் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு அவர் ஆளானார் என்றும் ஆனால் அதை எல்லாம் கடந்து இன்று அவர் படத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் நடித்துள்ளார் என்றும் படக்குழுவினர் அவரை பாராட்டினர்.
சமீபத்தில் தணிக்கைக்கு சென்ற இந்த பாடத்தை பார்த்த தணிக்கை குழு, இந்த படத்திற்கு ‘ஏ சான்றிதழ்’ வழங்கி உள்ளது. இதன் மூலம் இந்த படம் இளசுகளுக்கான படமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ட்ரைலர் வந்த நாள் முதலே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று இளசுகள் பலர் இலக்கியாவிடம் சமூக வலைதளத்தில் கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…