பிக் பாஸ்

பிக் பாஸ் அபிஷேக்கின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா? அந்த பெண் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு இதோ

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு இருக்கும் பிக் பாஸ் 5 சீசன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் அதன் போட்டியாளர்கள் பெரும்பாலும் புதுமுகங்களே. நமக்கு ஆறுதலாக ஒரு சில முகங்கள் தென்பட்டாலும் மற்ற அனைவருமே நம்மால் யூகிக்க முடியாத அளவிற்கு புதுமுகங்கள். விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினியான பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, விஜய் டிவியின் சின்னத்திரை நடிகர் ராஜு ஜெயராமன், அண்ணாச்சி இமான் போன்ற ஒரு சிலரை மட்டுமே நாம் சின்னத்திரைகளில் பார்த்திருக்கிறோம். மற்ற அனைவருமே நாம் இதுவரை பார்த்திராத முகங்கள் தான். இந்த முறை விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5வில் பரிட்ச்சயமான முகங்களை விட அதிகமாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

abishek

இந்தவகையில் யூட்யூபில் சினிமா விமர்சகராக இருக்கும் அபிஷேக் ராஜாவையும் அனைத்து நெட்டிசன்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். தனக்கு மட்டுமே எல்லாம் தெரிந்ததை போல காட்டிகொள்ளும் இவர் அடிக்கடி தன் பேட்டி எடுக்கும் பிரபலங்களிடம் மொக்கை வாங்கிக் கொண்டே இருப்பார். மேலும் இவர் தனக்கு சினிமா பையன் என்ற செல்ல பெயரையும் தாமே வைத்துக் கொண்டார்.

மேலும் இதனாலேயே அனைத்து வலைதள வாசிகளுக்கும் இவரை தெரிந்திருக்கக் கூடும். இவர் பேட்டி எடுக்கும் போது இவர் கொடுக்கும் ரியாக்ஷனில் கடுப்பாகாத பிரபலங்களே இல்லை.

Abishek Deepa

இவ்வாறு தனக்கென ஹேட்டர்ஸ் கூட்டத்தை வைத்துக் கொண்டு பிக் பாஸ் 5 போட்டியாளர்களுடன் இருக்கும் ஒரு முக்கிய போட்டியாளர் தான் அபிஷேக் ராஜா. அவருக்கென்று வெளியே இருந்து எதிரிகள் வர தேவையில்லை. அவர் வாயே அவனுக்கு முதல் எதிரி என்று அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் அபிஷேக் ராஜா தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். மேலும் தனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடத்திலேயே விவாகரத்து ஆகிவிட்டது என்றும் கூறி சக போட்டியாளர்களுகு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

deepa

அபிஷேக் ராஜாவிற்கும் தீபா நடராஜனிர்க்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். மேலும் தீபா நடராஜன் சூப்பர் சிங்கர் சத்யபிரகாஷின் நெருங்கிய தோழி ஆவார். சத்யபிரகாஷும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக
கடந்த 2019ஆம் ஆண்டு அபிஷேக் ராஜா மற்றும் தீபா நடராஜன் விவாகரத்து பெற்றனர்.

deepa

இவர்களின் விவாகரத்து பற்றி தீபா தற்போது ஒரு அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் தமக்கு ஒரு துக்கமான நிகழ்ச்சி நடந்தால் கண்டிப்பாக அதில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். மாறாக எனக்கு இந்த கல்யாணத்தில் இருந்து விடுவிக்க மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது. இந்த விவாகரத்து முடிவு என் சுய சிந்தனையில் நானே எடுத்த முடிவு. அதன்பிறகு என்னென்ன பிரச்சனை வரும் அதற்கான வழிமுறைகளையும் யோசித்து அதன் பின்னரே நான் இந்த விவாகரத்து முடிவை எடுத்தேன்.

deepa

மேலும் நான் திருமணமான புதிதில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறேன். தற்போது அந்த பேட்டி தான் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியை நீக்கும்படி அந்த குறிப்பிட்ட சேனலுக்கு பலமுறை தெரிவித்தும் அவர்கள் அதனை செய்யவில்லை. அது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago