பிக் பாஸ்

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த அபிஷேக். அப்படி அது என்ன உறுதிமொழி என்று தெரியுமா?

மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான நேற்று போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நன்றாக பேசி பழகி தங்களின் பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர். அறிமுகமில்லாதவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களின் வாழ்க்கை நிலைமை பற்றி பேசிக் கொள்கிறார்கள். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் ஒரு சிலர் தனி கூட்டமாகவும், ஆண்கள் சிலர் தனிக் கூட்டம் கூட்டமாகவும் இருந்து வருகின்றனர்.

bigg boss

அந்த சமயத்தில் பிக்பாஸ் சொல்லி அதற்கு ஏற்றவாறு நான்கு தலைவர்கள் தங்கள் விருப்பத்துடன் முன்வந்து தங்களின் அணியைத் தேர்வு செய்தனர் அதில் ராஜு அவர்கள் பாத்ரூம் அணியை தேர்வு செய்தார் அதற்காகத் தாமரை செல்வி அபிஷேக் தருண் போன்ற வரை தனது அணியில் சேர்த்துக் கொண்டார்.

பாவ்னி அவர்கள் வீட்டை சுத்தம் செய்யும் டீமின் தலைவியாக பொறுப்பேற்றார். அவரும் தனது அணிக்காக சுருதி, இசைவாணி, நீரூப் ஆகியோரை தேர்வு செய்து கொண்டார். பாத்திரம் கழுவும் அணியாக நமிதா தனது அணியை தேர்வு செய்தார். நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு அவர்கள் கிச்சன்டீம் தலைவியாக அவரது அணியை தேர்வு செய்து கொண்டார். இவ்வாறு அணியை தேர்வு செய்த பின்னர் நான்கு அணியும் அவரது அன்றாட வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர்.

chinna ponnu

கொஞ்சம் நேரம் கழித்து பிக்பாஸிடமிருந்து இவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டது. அவற்றை அனைவரும் ஒன்றாக சேர்ந்து அடுக்கி வைத்தனர். வீட்டிற்குள் வந்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கிச்சனிலிருந்து முதன் முதலில் கொடுக்கப்பட்டது சுவையான டீ. போட்டியாளர்கள் அனைவரும் டீயை அருந்திவிட்டு சுவையாக இருக்கிறது என்று கிச்சன் அணியை பாராட்டினார்.

அதன் பின்னர் பாத்ரூம் கழுவும் அணியிடம் பிரியங்கா அவர்கள் நீங்கள் சுத்தம் செய்த இடம் மிகவும் ஈரமாக இருக்கிறது. மறுமுறை சுத்தம் செய்யும் பொழுது இதனை கவனமாக செய்யுங்கள் என்று கூறினார் இந்த உரையாடலும் சற்று கலகலப்பாகவே சென்றது.

இவ்வாறு சென்று கொண்டிருக்க தாமரைச்செல்வி அவர்கள் தனக்கு பேய் என்றால் பயம் என்று கூறிக்கொண்டிருந்தார். இதனால் அவரை பயமுறுத்தும் வகையில் ஒரு பேய் கதையை ராஜு கூறினார். அதனை கேட்டு வீட்டிலிருந்த போட்டியாளர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தனர். இவ்வாறு அனைவரும் ஒற்றுமையாக சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

திடீரென விஜே அபிஷேக் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்து ஒன்றாக கைகோர்த்து வட்டவடிவமாக நிற்க வைத்தார். பின்னர் அனைவரையும் ஒரு உறுதிமொழி எடுக்குமாறு கூறினார். அது என்னவென்றால் பல கோடி மக்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்மிடமிருந்து நிறைய விஷயங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் முடிந்தவரை எப்பொழுதும் மக்களுக்கான பொழுதுபோக்கை சிறப்புடன் செய்வோம் என உறுதிமொழி எடுக்க வைத்தார். அதனைத்தொடர்ந்து அனைவருமே இந்த உறுதிமொழியை ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்டனர்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago