Categories: டிவி

அட! என்ன இது? இந்த ரசிகர் இப்படிக் கூறி விட்டாரே என அவர் கூறியதை நினைத்து சற்று குழப்பத்தில் இருக்கும் பாரதிகண்ணம்மா தொடரின் இயக்குனர்

பிரபல முன்னணி தொலைக்காட்சியில் இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரின் கதையில் பெரும்பாலான காட்சிகள் கதாநாயகியை மையமாக வைத்தே இருக்கின்றன. எப்பொழுதும் இருக்கும் மற்ற தொடர்களை விட சற்று வித்தியாசமான கதைக்களத்தில் இந்த தொடர் இருப்பதால் ரசிகர்கள் இதற்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.

barthikannama

சிறு வயதிலிருந்தே சித்தி கொடுமைக்கு ஆளாகி இருக்கும் கண்ணம்மாவை பார்த்தவுடனே டாக்டராக பணி புரியும் பாரதிக்கு மிகவும் பிடித்து போக தனது வீட்டில் உள்ளவர்களையும் எதிர்த்து கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்கிறார். இவரை ஒருதலையாக காதலித்து வரும் பாரதியின் தோழி வெண்பாவிற்கு இவர்களது திருமண தகவல் தெரிந்தவுடன் அவர் பாரதி மற்றும் கண்ணம்மாவின் மீது மிகுந்த கோபம் அடைகிறார். எப்படியாவது அவர்களை பிரித்து பாரதியுடன் தான் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளி நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு திரும்பி வருகிறார்.

வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு கண்ணம்மாவை தனது வீட்டிற்குள் அழைத்து வருகிறார் பாரதி ஆனால் பாரதியின் தாய்க்கு கண்ணம்மாவை சற்றும் பிடிக்காது என்பதால் இந்த வீட்டிலும் கண்ணம்மா பலவகையில் துன்பங்களை அனுபவிக்கிறார். இவ்வாறு புகுந்த வீட்டின் கஷ்டங்களையும் வெண்பாவின் சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு தனது வாழ்க்கையை போராட்டத்துடன் நடத்திவருகிறார் கண்ணம்மா.

barathikannama

ஆனால் வெண்பாவின் சூழ்ச்சியினால் தனது கணவர் பாரதியை விட்டு பிரிந்து ஒரு பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் கண்ணம்மாவிற்கு தனக்கு இன்னொரு குழந்தை இருக்கிறது என்பது தெரியாது. அதுபோல தனது வீட்டில் இருக்கும் குழந்தை தன்னுடையது என்றும் பாரதிக்கு தெரியாது. இந்த ஒரு விஷயம் இருவருக்கும் எப்பொழுது தெரிந்து அவர்கள் ஒன்று சேர்கிறார்களோ அப்பொழுது இந்த தொடர் முடிவடைந்துவிடும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் பாரதிகண்ணம்மா தொடர் 600 எபிசோடுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் இதற்கு மேல் என்ன புதியதாக வரப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தாலும் இதே கதை தொடர்ந்து நகர்வதால் ஒரு சிலர் என்ன இது கதையில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறதே என முகம் சுளிக்கவும் செய்கிறார்கள்.

பலரும் இவ்வாறு தங்கள் மனதிற்குள் நினைத்திருக்க ஒரு ரசிகர் மட்டும் நேரடியாக பாரதிகண்ணம்மாவின் இயக்குநரிடம் என்ன இது ஜவ்வு மிட்டாய் போன்ற இவ்வளவு வளவள என்று இழுத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டிருக்கிறார். இதனைக் கேட்ட இந்த சீரியலின் இயக்குநர் சற்று குழப்பத்தில் தான் இருக்கிறார் என்றும் சொல்லலாம்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago