Categories: டிவி

பாகியலட்சுமியின் உண்மையான மகளை பார்த்துள்ளீர்களா? இருவரும் சேர்ந்து வெளியிட்ட வீடியோ இதோ.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீரியலாக உள்ளது. இதில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுசித்ரா. இந்த சீரியலை பொறுத்தவரை இவர் ஒரு சிறந்த அம்மாவாக, சிறந்த மனைவியாக, மருமகளாக நடித்துவருகிறார்.

இந்த சீரியலை பொறுத்தவரை, எழில், செழியன் என்ற இரு மகன்களும் இனியா என்ற ஒரு மகளும் இவருக்கு உள்ளனர். இதில் எழில் என்பவர் இவருக்கு அனைத்து விதத்திலும் துணையாக இருக்கும் ஒரு மகனாக உள்ளனர். இவருடைய கணவர் இவரை அன்பாக நடத்துவது கிடையாது. அதேசமயம் அவருக்கு தன்னுடைய முன்னாள் காதலி மீது ஆசை உண்டு.

இப்படியாக இந்த சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி என்கிற சுசித்ராவை பொறுத்தவரை இது அவருக்கு முதல் சீரியல் கிடையாது. இதற்க்கு முன்பாகவே அவர் சில சீரியல்களிலும் படங்களிலும் கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் நடித்துள்ளார். தமிழை பொறுத்தவரை நாணல் என்ற சீரியல் மூலம் இவர் அறிமுகமானார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த சைவம் படத்தில் இவரை நாம் பார்த்திருப்போம். இவர் தன் சொந்த மகளோடு இனைந்து டப்மேஷ் செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், அருமை, அற்புதம் என்று கூறி உள்ளனர். அதே சமயம் வேறு சிலர், இந்த விஷயம் உங்கள் கணவர் கோபிக்கு தெரியுமா? இருங்க அவரிடம் சொல்கிறேன் என்பது போல கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago