தமிழ் திரை உலகில் கடந்த 2017ம் ஆண்டு இயக்குநர் ஷிவராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “காதல் கண் கட்டுதே”. இந்த படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கியவர் இளம் நடிகை அதுல்யா ரவி, வயது 27, கோவையில் பிறந்து வளர்ந்த தமிழ் திரை நடிகை மற்றும் மாடல். தொடர்ந்து தமிழ் திரை உலகில் வெளியான ” ஏமாளி”, “நாகேஷ் திரையரங்கம்” உள்ளிட்ட படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது பார்ட்டுக்களையும் பெற்றார் நடிகை அதுல்யா.

தொடர்ந்து ஹோம்லியாக நடித்து வந்த நடிகை அதுல்யாவுக்கு குணசித்திர வேடங்களே பெரும்பாலும் கிடைத்தன, பட வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது, இதனால் கிளாமராக நடித்து இழந்த மார்கெட்டை மீட்க முடிவு செய்த நடிகை அதுல்யா கடந்த 2019ம் ஆண்டு நடிகர் ஜெய் ஜோடியாக நடித்து வெளியான “கேப்மாரி” படத்தில் கிளாமராக நடித்ததுடன் நடிகர் ஜெய்யுடன் சில நெருக்கமான காதல் காட்சிகளிலும் நடித்து அசத்தினார்.
இதனை தொடர்ந்து “முருங்கக்காய் சிப்ஸ்”, ” நாடோடிகள் 2″ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை அதுல்யா இந்தாண்டு “வட்டம்”, ” எண்ணித்துணிக”, மற்றும் “காடவர்” ஆகிய 3 படங்களில் நடித்துள்ளார். இதில் “எண்ணித்துணிக” படத்தில் மட்டுமே நாயகியாக நடித்துள்ளார், மீதமுள்ள 2 படங்களிலும் குணசித்திர வேடங்களிலே நடித்திருந்தார் நடிகை அதுல்யா.

தற்போது நடிகை அதுல்யா கைவசம் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடித்து வரும் “டீசல்” படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதிய பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வரும் நடிகை அதுல்யா மீண்டும் பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் நடிகை அதுல்யா கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் மற்றும் புடவை கட்டிக்கொண்டு ஒரு அட்டகாசமான பிரத்யேக போட்டோஷூட்டில் பங்கேற்றிருந்தார். நடிகை அதுல்யா ரவிரின் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றபட்டு வைரலாகி வருகின்றன. இந்த பிரத்யேக போட்டோஷூட்கள் நடிகை அதுல்யா ரவிக்கு புதிய பட வாய்ப்புகளை கொடுக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.