பொதுவாக சீரியல் என்றாலே நூற்றுக்கணக்கான எபிசோடுகளை கடந்து சில வருடங்களாவது ஒளிபரப்பாகும். அப்படி இருக்கையில் அதில் உள்ள அனைத்து நடிகர்களையும் தொடர்ச்சியாக அதே சீரியலில் தக்கவைத்துக் கொள்வதென்பது மிகவும் சவாலான ஒரு விடயம் தான். சில சீரியலில்களில் கதாபாத்திரம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
உதாரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை எடுத்துக்கொண்டால் ஐஸ்வர்யா பாத்திரம் சமீபத்தில் தான் மாறியது. அதேபோல பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலன் கதாபாத்திரமும் சமீபத்தில் மாறியது. இப்படி இந்த வரிசை நீண்டுகொண்டே சொல்லும். இந்த வாசிசையில் தற்போது இணைந்துள்ளது அஸ்வின் என்னும் கதாபாத்திரம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில், பாண்டியன் ஸ்ட்ரோர்ஸ் புகழ் வெங்கட், அஸ்வின் என்னும் காதாபாத்திரத்தில் இதுவரை நடித்து வந்தார். ஆனால் சமீபத்தில் அவர் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து புதிதாக ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார்.
நடிகர் சங்கரேஷ் தான் இனி ரோஜா தொடரில் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்ற அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர் ஜீ தமிழ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்துக்கொண்டிருப்பது குறிப்பிட தக்கது. அதே போல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் வானத்தை போல தொடரிலும் இவர் நடித்துவருகிறார்.
கடந்த வாரம் TRPயை பொறுத்தவரை ரோஜா சீரியல் தான் முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் அதில் ஒரு கதாபாத்திரம் மாறி இருப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மீண்டும் இந்த வாரமும் ரோஜா சீரியல் முதல் இடத்தை பிடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரோஜா சீரியலில் இருந்து விலகியது குறித்து தனது ரசிகர்களிடம் நடிகர் வெங்கட் மன்னிப்பு கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…