பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின் மகன்தான் வெங்கட் பிரபு. இவர் தனது கல்வி வாழ்க்கையை முடித்து பின்னணி பாடகராக தன் வாழ்க்கையை தொடங்கினார். வெங்கட்பிரபு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி தந்தையிடம் சினிமா நுணுக்கங்களை கற்று தன் இயக்கத்தில் சென்னை 600028 என்ற படத்தை நண்பர் சரண் தயாரிப்பில் வெளியிட்டார்.
இந்த படம் தமிழ் சினிமாவில் நன்கு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு சிறந்த தேடலுக்கான விஜய் விருதும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, போன்ற படங்களை இயக்கி வந்தார். இவரின் படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் நன்கு வரவேற்கப்பட்டது. மற்ற இயக்குனர்களை காட்டிலும் இவர் சற்று வித்தியாசமான இயக்குனர். அவரின் கதையும் வித்தியாசமாகவே அமைந்திருக்கும். பெரும்பாலான ஹீரோக்கள் நல்லவராகவும் புத்திசாலியாகவும் பலசாலியாகவும் தான் காட்டப்படுவார்கள் ஆனால் இவரின் கதையில் தான் ஹீரோ காமெடியனாகவும் வில்லனாகவும் காட்டப்படுவார்கள்.
இது தமிழ் சினிமாவில் வித்தியாசமாக பார்க்கப்பட்டது. அதற்குமேல் ரசிகர்களால் இளைஞர்களால் நன்கு ஈர்க்கப்பட்டது. தற்போது அவர் சிறிது காலம் பிரேக் எடுத்திருந்த நிலையில் மாநாடு என்ற படம் இவரின் இயக்கத்தில் வெளிவந்தது. இது வித்தியாசமான ஒரு லூப் கதையை வைத்து சிம்புவையும் புதுமை தோற்றத்தில் மாற்றி காட்டப்பட்டது. இது தமிழ் சினிமாவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் மாற்றியமைக்கப்பட்டு பொருளாதார ரீதியாகவும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் குட்டி ஸ்டோரி, லைவ் டெலிகாஸ்ட், பார்ட்டி, போன்ற படங்களையும் இவர் இயக்கி வருகிறார். இது அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அவரின் சம்பளம் மாநாடு படத்தில் தயாரிப்பளர்களிடம் 4 கோடி வாங்கியதாகவும் மாநாடு பட வெற்றியை வைத்து தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க தயாரிப்பாளரிடம் 15 கோடி கேட்டு இருப்பதாகவும். மேலும் தமிழ் தயாரிப்பாளர்களிடம் 7 கோடி கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கும் வேலையில் தயாரிப்பாளர்களும் வெங்கட்பிரபுவின் மேல் உள்ள நம்பிக்கையில் அவரின் கோரிக்கையை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. காலங்கள் புதுமையாக மாற மாற மக்கள் ரசனைக்கேற்ப திரைப்படக் காட்சிகளையும் வெங்கட்பிரபு டிஃபரண்டாக குடுப்பார் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…