நடிகர் சத்யராஜ் பாகுபலி படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கட்டப்பானா சும்மாவா

கோவை மாவட்டத்தில் பிறந்த எம் ஜி ஆரின் தீவிர ரசிகனாக இருந்து திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் சத்யராஜ். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ரங்கராஜ் தனது பள்ளிப்படிப்பை முடித்து கோயம்புத்தூரின் கலைக்கல்லூரியில் இளங்கலைத் தாவரவியல் பட்டமும் முடித்தார். அங்கே பிரபல இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் பியூசி படித்து வரவே அங்கேதான் இவர்களுடைய நட்பும் உருவானது என்று பேசப்படுகிறது.

பிறகு சத்யராஜ் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் சிறந்த நடிகராக மாறி வில்லாதி வில்லன் என்ற திரைப்படத்தை இயக்கி, லீ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார். என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே, என்னம்மா கண்ணு, தகடு தகடு, என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார். அவருக்கே உரித்தான தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

ஹீரோ, எதிர்மறைக் கதாபாத்திரம், நகைச்சுவை போன்ற கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு பெரியார் திரைப்படமும் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படமும் வரலாறு படைத்த படங்களாக மாறி அவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தது. அவர் கதாநாயகனாக நடித்த காலகட்டங்களில் அனைத்து கதா நாயகிகளோடும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இதோடு சேர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்ஜிஆர் விருது, பெரியார் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, விஜய் விருது, என இன்னும் பல விருதுகளை வென்று இன்றளவும் தமிழ் சினிமாவில் தன் திறமையால் நிலைத்து நிற்கிறார்.

இப்போது 1945, ஷ்யாம், பக்கா கமர்சியல், தமிழில் எதற்கும் துணிந்தவன், பார்ட்டி காக்கி, போன்ற படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார். இந்த நிலையில் சத்யராஜின் கெரியருக்கு முக்கியமாக அமைந்த திரைப்படம் பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2. இதில் சத்யராஜ் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்து தமிழ் மக்களால் அதிகம் பாராட்டப்பட்டார். அதற்காக அவர் வாங்கிய சம்பளம் பாகுபலி 1காக ஒரு கொடியும் பாகுபலி 2 காக 2 கோடியும் என தகவல் வெளியாகி இருக்கிறது

Pratheep

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago