பொழுதுபோக்கு

தனுஷின் ஆடைக்கான செலவு இவ்வளவா? தலைசுற்றிப்போன தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பின் மூலமாக முன்னணி நடிகராக முன்னேறியவர் நடிகர் தனுஷ். மேலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி தனது உழைப்புக்கு பலனாக இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

dhanush

தனுஷ் தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’,பாலிவுட்டில் அக்ஷயகுமாருடன் ‘அட்ரங்கி ரே’, டோலிவுட்டில் ‘வாத்தி’ என அனைத்து மொழி திரைத்துறையில் கால்பதித்துள்ளார்.

தெலுங்கில் ‘வாத்தி’ என்ற பெயரில் உருவாகும் படத்தை தேசிய விருது வென்ற வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதை வம்சி, சாய் செளஜன்யா ஆகியோர்இணைந்து தயாரிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படம் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Dhanush

‘வாத்தி’ படத்தில் தனுஷின் மேக்கப், ஆடை வடிவமைப்புக்கு ஆகும் செலவை கேட்டு அப்படத்தின் தயாரிப்பாளர் ஆச்சரியத்தில் உள்ளார். காரணம் பொதுவாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் படத்தில் அவர்களுக்கான ஆடை அலங்காரம், மேக்கப், அணிகலன்களுக்கு கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் பணம் செலவழிப்பது வழக்கமான ஒன்று.

ஆனால் ‘வாத்தி’ படத்திற்கு தனுஷின் ஆடை வடிவமைப்புக்கு மொத்தமே ஏழு லட்சத்திலிருந்து எட்டு லட்சம் வரை செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் இந்த எளிமையை கண்டு வாத்தி படத்தின் தயாரிப்பாளரும் படக்குழுவினரும் ஆச்சரியத்தில் உறைந்து போய் உள்ளனர். மேலும் தனுஷின் இந்த எளிமையே அவரது அசுர வளர்ச்சிக்கு காரணம் எனவும் பாராட்டியுள்ளனர்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago