பிக் பாஸ்

சிபி சக்கரவர்த்தி எடுத்த புத்திசாலித்தனமான முடிவு. அதிர்ந்து போன பிக்பாஸ்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா,சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது.

நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தற்போது ‘பிக்பாஸ் சீசன் 5’ ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வழக்கம்போல் இறுதி கட்டம் என்பதால் பரபரப்பு பஞ்சம் இல்லாமல் கடந்த சில நாள்களாக நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘பிக்பாஸ் சீசன் 5’-இல் ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற போட்டியாளர் சிபி சக்கரவர்த்தி. இவருடைய நேர்மை, எதார்த்தமான குணமும் ரசிகர்களுக்கு பிடித்து போனது. அதுமட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை விட சிபி சக்கரவர்த்தியின் அணுகு முறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இறுதி வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சிபி அங்கிருந்து விடைப்பெற்றார். இந்த செயலால் சிபியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிபி பிக்பாஸ் வீட்டிலிருந்த வரை அனைத்துப்போட்டிகளிலும் தன்னுடைய முழு பலத்தையும் கொடுத்து வெற்றிப்பெற்றார். சென்ற வாரம் எவிக்சன் பட்டியலில் இடம் பெற்றிருந்த சிபி சக்கரவர்த்தி, கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார்.

இந்த நிலையில் சிபி, ரூ.12 லட்சம் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். சிபியின் இந்த செயல் புத்திசாலிதனமானது என சிலர் சமூகவலைதளத்தில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது சிபியின் இந்த செயல் சமூகவலைதளத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. சிபி ரூ.12 லட்சத்தை எடுத்து வெளியேறியது நல்ல முடிவு தான். அவரது எதிர்காலம் சிறப்பாக அமையுட்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸில் கடந்த சீசன் வரை ரூ.5 லட்சம் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இந்த சீசனில் ரூ.12 லட்சம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago