நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது.
நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நேற்று முடிவடைந்தது. இந்த சீசன் வின்னராக ராஜூ அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ராஜூக்கு பரிசு தொகையாக ரூ.50 லட்சம், இத்தனை நாள்கள் இருந்தற்கான சம்பளம் என மொத்தம் ரூ.70 லட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இறுதி வரை வந்த போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்தான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிரியாங்காவிற்கு ரூ.28 லட்சத்து 25 ஆயிரம், பாவானிக்கு ரூ.20 லட்சத்து 17 ஆயிரம், அமீருக்கு ரூ.5 லட்சத்து 60 ஆயிரம், நிரூப் ரூ. 11 லட்சத்து 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதாக தெரியவந்ததுள்ளது.
அடுத்த பிக் பாஸ் குறித்தான அப்டேட்களை ரசிகர்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக கேட்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் இப்போது பிக் பாஸின் அடுத்த சீசன் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸின் அடுத்த சீசன் தொலைக்காட்சியில் ஒளிப்பராகமல் நேரடியாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
ஓடிடியில் பிக்பாஸ் வெளியாகும் முதல் சீசன் குறித்து ரசிகர்களிடையே இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த சீசனில் புதிய போட்டியாளர்களை களம் இறக்காமல், இதுவரை நடந்து முடித்த சீசனில் ரசிகர்களுக்கு பிடித்தமான, சுவாரசியமான போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களையே கலந்துகொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ஓடிடியில் பிக்பாஸ் முதல் சீசனில், பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, கவின், ஷெரின், ஜனனி ஐயர், தர்ஷன், அனிதா, வனிதா, லாஸ்லியா, ஹரிஸ் கல்யாண், ஜூலி, ஆகியோருடன் பிக்பாஸ் முதல் சீசனில் பாதியில் வெளியே போனாலும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்து தனக்கென ஆர்மியை உருவாக்கிய ஓவியாவும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓடிடியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறையாமல் இருக்கவே இந்த போட்டியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக பிக்பாஸ் குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சியைும் வழக்கம் போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். எனவே பிக்பாஸ் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…