திரைவிமர்சனம்

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கேப்டன் படம் எப்படி இருக்கு?- வாங்க பார்க்கலாம்..

தமிழ் திரை உலகில் இயக்குநர் ஷக்தி சவுந்திர ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, நடிகைகள் சிம்ரன் மற்றும் ஐஷ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் தான் “கேப்டன்”. இந்த படத்தில் நடிகர் ஆர்யா இராணுவ கேப்டனாக அதிரடியாக நடித்து அசத்தியிருக்கிறார். இந்த படம் பற்றிய விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

வெற்றி செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா இந்த படத்தில் அதிரடியாக நடித்து அசத்தியுள்ளார். இந்திய இராணுவ கட்டுப்பாட்டில் 3 நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பகுதி செக்டர் 42. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள இந்த பகுதி மனிதர்கள் வசிக்க ஏதுவான பகுதியா என கண்டறிய இந்திய இராணுவம் சிறு இராணுவ குழுக்களை அனுப்புகிறது. ஆனால் அந்த பகுதிக்கு செல்லும் இராணுவ வீரர்கள் யாரும் உயிருடன் திரும்பி வருவதில்லை.

இரண்டு முறை தோல்வியை தழுவிய இந்திய இராணுவம், மூன்றாவது முறையாக வெற்றி செல்வன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது. இந்த குழு ஒரு வினோதமான உயிரினத்தால் தாக்கப்பட்டு நினைவிழந்து விழுகின்றனர். ஆனால் வெற்றி செல்வனுக்கு மட்டும் மயக்கம் வராத நிலையில் குழு உறுப்பினரான கார்த்தி தேவன் (நடிகர் ஹரிஷ் உத்தமன்) வெற்றி செல்வனை சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். கார்த்தி தேவன் ஏன் வெற்றி செல்வனை சுட்டார், அவர் ஏன் தற்கொலை செய்தார் என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த நிலையில் டாக்டர் கீர்த்தி (நடிகை சிம்ரன்) அந்த பகுதியை ஆராய்ச்சி செய்ய வருகிறார். அப்போது ஒரு புதிய வகை உயிரினம், மனிதர்களின் நரம்பு மன்டலத்தை கட்டுபடுத்த கூடிய உயிரம் ஒன்று தான் அனைவரையும் தாக்குவதாக கண்டறிகிறார். அந்த உயிரினத்துக்கு மினோட்டோர் என்று பெயரிடுகிறார். மீண்டும் வெற்றி செல்வன் தலைமையில் ஒரு குழுவுடன் காட்டுக்குள் பயணிக்கிறார் டாக்டர் கீர்த்தி. செக்டர் 42 பகுதியில் நூற்றுக்கனக்கான மினோட்டோர்கள் இருப்பதை கண்டறியும் குழு அதனை எதிர்த்து போராடும் போது அதன் தாக்குதலில் வழக்கம் போல மயக்கம் அடைகின்றனர்.

ஆனால் இந்த மினோட்டர் தாக்குதல் வெற்றி செல்வனை மயக்கம் அடையாத நிலையில் மினோட்டருடன் கடுமையாக போராடி ஒரு மினோட்டரையும் பிடித்து டாக்டர் கீர்த்தியின் ஆய்வகத்திற்கு கொண்டு வருகிறார். ஆய்வகத்தில் இந்த மினோட்டர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றது. இதன் தாக்குதலில் ஏன் மனிதர்கள் மயக்கம் அடைகின்றனர், வெற்றி செல்வன் மட்டும் ஏன் அந்த தாக்குதலில் மயக்கம் அடையவில்லை என பல தகவல்கள் கிடைக்கின்றது.

நூற்றுக்கணக்கான மினோட்டர்களை அழிப்பதற்கு பதிலாக மினோட்டர்களின் ராணி யார் என்பதை கண்டுபிடித்து அழிக்க முடிவெடுத்து கிழம்பும் குழு, அவைகளை அழித்தார்களா இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.

ஹாலிவுட் படங்களான ப்ரிடேட்டர் பானியில் இருந்தாலும் மினோட்டர் வரும் காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் என்பது அப்பட்டமாக தெரிவதால் பார்ப்போருக்கு சுவாரஸ்யம் கொஞ்சம் கம்மியாகவே இருக்கிறது. இறந்து போன கார்த்தி தேவனின் தங்கையான காவ்யா (நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி) வெற்றி செல்வன் காதலியாக ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார். மினோட்டர் என கூறிவிட்டு இறுதியில் ராட்சச ஆக்டோபஸ் உடன் மோதும் காட்சியும் ரசிப்பதாக இல்லை. இருப்பினும் தமிழ் திரை உலகில் ஒரு புது விதமான முயற்சி இந்த கேப்டன்.

Danny

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago