இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் பெற்றார். பின்னர் தமிழில் நடிகர் விஜய் உடன் ‘தமிழன்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் பிரியங்கா பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து ஹாலிவுட், அமெரிக்க சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்கள், வெப் தொடர்கள் என பிரியாங்கா சோப்ரா பிஸியானார்.
டைம் ஊடகத்தின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் மற்றும் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்தார். இந்த சூழலில் கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் பிரியங்கா சோப்ரா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதள பக்கங்களில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த நிக் ஜோனஸ் என்ற பெயரை நீக்கினார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு, இருவரும் விவாகரத்து செய்யப் போகின்றனர் என்றெல்லாம் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது வாடகைத் தாய் மூலம் இத்தம்பதி பெற்றோர் ஆகியுள்ளனர். இது குறித்து இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதில் “நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றுள்ளோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். அதே வேளையில் நாங்கள் எங்களின் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதால் எங்களின் தனிப்பட்ட சுதந்திரம் கருதி யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். மிக்க நன்றி” என அதில் தெரிவித்துள்ளனர்.
பிரியங்கா சோப்ராவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போல் சிலர், காசு பணம் இருப்பதால் அதன் திமிரை பிரியங்கா காட்டி வருவதாக ட்ரோல் செய்தும் திட்டி தீர்த்தும் வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…