பிரம்மாண்ட இயக்குநர் அடுத்ததாக ராம் சரணை வைத்து புதியப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். பெரும் பொருள் செலவில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் ஷங்கர் ரூ.23 கோடி செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷங்கர் மற்றும் படக்குழுவினர் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர், கரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு மந்தமான நிலையில் காணப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் ஷங்கர் தமிழ் அல்லாது பிற மொழியில் படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில், ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் திரையரங்கு உரிமையை தவிர மற்ற அணைத்து உரிமைகளும் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…