Categories: Uncategorized

கரகாட்டக்காரன் புகழ் “கனகா” தற்போது எப்படி இருக்காங்க தெரியுமா?

1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கனகா. முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே இவர் சேர்த்தார் என்றால் மிகையாகாது.

அந்த படத்தை தொடர்ந்து அவர் எதிர்காற்று, அதிசய பிறவி இப்படி பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் மட்டும் அல்லாமல் மலையாள படங்களிலிலும் இவர் நடித்திருந்தார். ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பது என்னவென்றால், நான் நடிப்பு துறைக்கு வந்து கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் ஆகி உள்ளன. இந்த 32 ஆண்டுகளில் திரைத்துறையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மேக்கப், ஆடை, செருப்பு முதற்கொண்டு எல்லாமே தற்போது மாறியுள்ளன. நான் நடித்த காலத்தில் இருந்தது போல இப்போது எதுவுமே இல்லை. என்னிடம் யாரவது எப்படி நடிப்பது எப்படி ஒப்பனை செய்வது போன்ற விஷயங்களை கேட்டு அதே போல் செய்தால் அதை சிலர் பழையது என்று தான் கூறுவார்கள்.

10 வருடத்திற்குள் இருந்தால் தான் எதுவுமே புதிது என்று கூறுவார்கள். ஆகையால் நான் ஏதாவது செய்யவேண்டும் என்றால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொள்வதற்கு சில நாட்கள் தேவைப்படும். சின்ன வயதில் எளிதாக கற்றுக்கொள்ளலாம் ஆனால் எனக்கோ வயது 50. இந்த வயதில் கற்றுக்கொள்ள அதிக நாட்கள் தேவைப்படும்.

kanaga latest photo

என் மனதில் தெம்பும், ஆர்வமும் இருப்பதால் நான் அனைத்தையும் மீண்டும் கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. சிலர் பேர், வயதான காலத்தில் இந்த ஆசை எல்லாம் இவர்களுக்கு வந்துவிட்டதே என்று குறை கூறினாலும் கூறுவார்கள். அனால் நான் நிச்சயம் கற்றுக்கொள்வேன் என்று அவர் கூறி உள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் நடிக்க வரப்போகிறாரா என்ற எண்ணம் பலரது மனத்திலும் எழ துடங்கி உள்ளது.

Saravanan

Share
Published by
Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago