பொழுதுபோக்கு

ரஜினி படத்தில் நடிக்க ஆசைப்பட்டு தேடி போய் வாய்ப்பு கேட்ட தளபதி விஜய். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது எந்த படம் தெரியுமா?

தளபதி விஜய் என்றால் இன்று பட்டி தொட்டி எங்கும் தெரியும். அந்த அளவிற்கு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் விஜய். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இவருடைய படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக கேரளாவில் அங்குள்ள நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் விஜய்க்கு உள்ளனர்.

இப்படி இன்று மிகப்பெரிய ஸ்டாராக இருக்கும் விஜய், ஆரம்ப காலத்தில் மற்ற நடிகர்களைப்போல சாதாரணமாகவே இருந்தார். இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த. ரஜிகாந்த வந்து படத்தில் முகத்தை காட்டினாலே போதும் அந்த படம் அவருக்காகவே 100 நாட்கள் ஓடும் என்ற அளவிற்கு உச்சத்தில் இருந்தவர், தற்போதும் இருப்பவர் ரஜினி காந்த.

நடிகர் விஜய் எஸ்.ஏ சந்திரசேகரின் மகனாக இருந்தாலும் தன்னுடைய தனி தன்மையாலும் கடின உழைப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் பல மேடைகளில் தான் ஒரு மிகப்பெரிய ரஜினி ரசிகன் என்பதை வெளிப்படையாக கூறி உள்ளார்.

ரஜினி ரசிகர் என்றாலே அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பலரும் எண்ணுவதுண்டு. அதிலும் தளபதி விஜய் ஒரு நடிகர் என்பதால் எப்படியாவது ரஜினியோடு நடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் படையப்பா படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.

அன்றைய சூழலில் சில காரணங்களுக்காக படையப்பா படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த தகவலை அந்த படம் வெளியான சமயத்தில் தளபதி விஜயே ஒரு மேடையில் கூறியுள்ளார். அந்த சமயத்தில் கூட விஜய்க்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் எந்த வித தலைக்கனமும் இல்லாமல் இந்த தகவலை தளபதி அப்போது பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் பரவி வருகிறது.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago