பொழுதுபோக்கு

தளபதி விஜய் நடித்த கில்லி படத்தின் வசூல் அந்த காலகட்டத்திலேயே இவளோவா

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைகிறது. இப்படி தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் நாளைய தீர்ப்பு என்னும் படத்தில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தன் பயணத்தை துவங்கினார்.

என்னதான் தந்தை இயக்குனராக இருந்தாலும் மகனை அவ்வளவு சுலபமாக தமிழ் சினிமா நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆகையால் இவரின் வெற்றிக்கு இவரின் விடாமுயற்சியும் உழைப்பும் மட்டுமே காரணமாகும். எல்லா ஹீரோக்களுக்கும் காலம் முழுவதும் பேசும் அளவிற்கு ஒரு ஹிட் திரைப்படம் அமைவதில்லை ஆனால் தளபதி விஜய்க்கு அப்படி பல படம் அமைந்தது. அதில் ஒரு திரைப்படம்தான் கில்லி. இந்த திரைப்படம் தெலுங்கில் மகேஷ் பாபுவினால் நடிக்கப்பட்டு தமிழில் இயக்குனர் தரணியால் இயக்கப்பட்டது. தெலுங்கில் இந்த படத்தின் பெயர் ஒக்கடு.

சென்னை மெட்ராஸாக இருந்த நேரத்தில் குணசேகரன் என்கிற உதவி இயக்குனர் ஹைதராபாத்தின் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தார். 2001இல் பேட்மிட்டன் வீரர் குளியல் புலேலா கோபிசந்தின் பேட்டி ஒன்று, தன் தந்தையை எதிர்த்து பேட்மிட்டன் விளையாடியதாகவும் கோப்பைகளை தன் தந்தைக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்ததையும் கேட்டு பேட்மிட்டனை கபடிமாக மாற்றி ஒரு கதையை தயார் செய்தார். குணசேகரன் முதன்முதலில் இந்த கதையை பவர் ஸ்டார் பவன் கல்யாணிடம் கொண்டு செல்கிறார். பவன் கல்யாண் மறுத்திடவே மகேஷ்பாபுவை வைத்து நடிக்க துவங்குகிறார். ஒக்கடு படம் ரிலீஸ் ஆகவே பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இதனை தரணி தமிழ்சினிமா ரசனைக்கேர்ப்ப ஹீரோ அப்பாவிடம் திட்டு வாங்குவது, தங்கையை கலாய்ப்பது, அம்மாவை ஏமாற்றுவது போன்ற சுவாரசியங்களை உள் திணித்து மேலும் ஓட்டேரி நரி போன்ற நகைச்சுவையான பெயர்களை வைத்து கில்லி என்று பெயரை மாற்றி அசத்தி இருந்தார். 2003 ஆம் ஆண்டு படம் எடுத்து 2004ஆம் ஆண்டு கில்லி படம் வெளியாகவே பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதுவரையில் தமிழ்சினிமாவில் வெளிவந்த படங்கள் அனைத்தும் 3 அல்லது4 மாதங்களிலேயே டிவியில் ஒளிபரப்பாகிவிடும் ஆனால் கில்லி திரைப்படம் மூன்று வருடங்கள் கழித்து தான் டிவியில் ஒளிபரப்பானது. அந்த காலகட்டத்திலேயே 35 கோடி வசூல் செய்தது. இந்த படம் விஜய் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய உந்துகோலாக இருந்தது. இதனைத் தொடர்ந்து தளபதிவிஜய் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுக்க துவங்கினார்.

Pratheep

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago