விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த ஆல்யா மானசா தான் ராஜா ராணி இரண்டாம் பாகத்திலும் சித்துவுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது
ஆல்யா ராஜா ராணி சீரியலில் நடிக்கும் பொழுது தன்னுடன் நடித்த சஞ்சயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து சில ஆண்டுகளில் ஐலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. இதை தொடர்ந்து சீரியல் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் களிலும் தன் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென்று ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி வருகிறார் ஆல்யா .
சிறிது நாட்களுக்கு முன்னால் வலைதளங்களில் தான் கர்ப்பமாக இருப்பதை கூறி ஆண் குழந்தை பிறந்தால் ஆஸ்ட் என்றும் பெண் குழந்தை பிறந்தால் லைலா என்றும் பெயர் வைப்பதாக மகிழ்ச்சியோடு வெளியிட்டார் ஆல்யா. இந்த நிலையில் பிரசவத்திற்கு பிறகு ஆல்யா நடிக்கப்போவதில்லை என்ற செய்தியை வலைதளத்தில் பரவியது. அதனை தொடர்ந்து, பிரசவத்திற்கு பிறகு நீங்கள் நடிப்பீர்களா என்று ஆல்யாவிடம் அவரது ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் கேட்டதற்கு அவர் கூறிய பதில் பின்வருமாறு.
சீரியலை விட்டு போகவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் வந்ததில்லை எனவும் ராஜா ராணியில் ஒரே சந்தியா தான் அது இந்த ஆல்யா தான் எனவும் சுவாரசியமாக கூறியுள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வேடத்தில் நடித்த பரினா, குழந்தை பிறக்கும் வரை சீரியலில் நடித்து குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து நடிக்க வந்துவிட்டார். அதே நடைமுறையை ஆல்யாவும் பின்பற்றுவார் போல.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…