தமிழ் சினிமாவில் அர்ஜூன் நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜென்டில் மேன்’. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். ஊழலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் அர்ஜூனுடன் மதுபாலா, செந்தில், கவுண்டமணி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
‘ஜென்டில் மேன்’ படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க கே.டி குஞ்சுமோன் தயாரித்திருந்தார். ‘ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்காக தயாரிப்பாளர் குஞ்சு மோன் இயக்குநர் ஷங்கர், நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் வேறு படத்தில் பிஸியாக இருப்பதாக சொல்லி மறுத்து விட்டார்களாம். ஷங்கரின் வெற்றிக்கு ஏணியாக அமைந்த குஞ்சு மோகனின் பட வாய்ப்பை நிராகரித்தது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் புதுமுகங்களை வைத்து ‘ஜென்டில்மேன் 2’ படத்தை குஞ்சுமோன் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ பட இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், துணை கதாபாத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கரின் மருமகன் மீது பாலியல் வன்முறை புகார், ‘அந்நியன்’ இந்தி ரீமேக் விவகாரம் என ஏற்கனவே ஷங்கரை சுற்றி பல பிரச்சனைகள் இருக்க இப்போது ‘ஜென்டில் மேன்’ பிரச்சனையும் இதில் இணைந்துள்ளது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…